Ghilli : நல்ல வேள அவர் நடிக்கல... கில்லி படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகரா?

First Published Mar 25, 2024, 11:24 AM IST

தரணி இயக்கத்தில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு முன் ஹீரோவாக நடிக்க இருந்த மாஸ் நடிகர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ghilli Vijay

தமிழ் சினிமாவில் வரிசையாக மூன்று கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து அசர வைத்தவர் தரணி. அவர் கடந்த 1999-ம் ஆண்டு எதிரும் புதிரும் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை. இதையடுத்து கமர்ஷியல் ரூட்டுக்கு திரும்பிய தரணி, நடிகர் விக்ரமை வைத்து தில், தூள் என வரிசையாக இரண்டு மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.

Vijay, Trisha

இதையடுத்து விஜய்யுடன் கூட்டணி அமைத்த தரணி, அவரை வைத்து கில்லி படத்தை இயக்கினார். இது ஒக்கடு என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் விஜய் வேலு என்கிற கதாபாத்திரத்தில் கபடி வீரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த இப்படம் மாஸ் ஹிட் அடித்தது. வித்யாசாகர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதோடு வைரல் ஹிட் அடித்தன.

இதையும் படியுங்கள்... Anirudh Ravichander: தீம் மியூசிக் போடமாட்டேன்; CSK கொடுத்த ஆஃபரை நிராகரித்த அனிருத் - காரணம் என்ன?

Vijay is not the first choice for Ghilli Movie

நடிகர் விஜய்யின் கெரியரில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் படம் என்றால் அது கில்லி தான். அந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது இப்படம். ஆனால் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா, ஆனால் அது தான் உண்மை. இப்படத்தை விஜய்யை வைத்து எடுக்க வேண்டும் என்கிற ஐடியாவே தரணியிடம் முதலில் இல்லையாம். அவரின் பர்ஸ்ட் சாய்ஸே வேற.

Chiyaan Vikram

ஏற்கனவே தில், தூள் போன்ற படங்களில் விக்ரமுடன் பணியாற்றியதால் அவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கில்லி படத்தையும் விக்ரமை வைத்து இயக்கும் முடிவில் தான் இருந்தாராம் தரணி. மேலும் அதில் ஹீரோயினாக ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அந்த சமயத்தில் இருவருமே வேறு படங்களில் பிசியானதால் நடிக்க முடியாமல் போக, பின்னர் விஜய்யிடம் அந்த கதையை சொல்லி ஓகே வாங்கிய தரணி, கில்லி போல் சொல்லி அடித்திருக்கிறார் வெற்றியை. காலம் கடந்து கொண்டாடப்படும் இப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி சீசன் 5 TRP-யை எகிற வைக்க... 3 பிக்பாஸ் போட்டியாளர்களை களமிறக்கும் விஜய் டிவி..!

click me!