Vignesh: திருமணம் முடிந்த கையோடு விக்கி -நயன் சென்ற முதல் இடம்...அப்ப ஹனிமூன் என்னாச்சு..? வருத்தத்தில் விக்கி

First Published Jun 10, 2022, 11:44 AM IST

Vignesh Shivan - Nayanthara Wedding: விக்னேஷ் - நயன்தார ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்தது. இந்த நிலையில், தம்பதியினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் சென்றுள்ளனர். இன்று திருப்பதியில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

Vignesh Shivan - Nayanthara

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரவும்,  இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நானும் ரவுடிதான் என்ற படத்தில் தொடங்கிய இவர்களின் காதல் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.
 

Vignesh Shivan - Nayanthara

விக்னேஷ் - நயன்தார தம்பதியினரின் திருமணம் நேற்று மாமல்லபுரத்தில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. மேலும் திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இவர்களின் கல்யாண நிகச்சியை ஒளிபரப்பும் உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் ரூ 25 கோடிக்கு பெற்றுள்ளது.

Vignesh Shivan - Nayanthara

இந்நிலையில், திருமணம் நடந்து கொண்டிருக்கும்போதே திருமணம் தொடர்பான புகைப்படங்களை  விக்கி -நயன்தாரா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

Nayanthara and Vignesh Shivan

இந்த நிலையில், விக்னேஷ் - நயன்தார தம்பதியினர், திருமணம் முடிந்த கையோடு  இன்று திருப்பதியில் சாமி தரிசனம் சென்றுள்ளனர். இன்று திருப்பதியில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

Nayanthara and Vignesh Shivan

இதையடுத்து, நாளை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்கின்றனர். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், தம்பதியினர் ஹனிமூன் கிளம்பவில்லையாம்.  நயனுக்கு ஷாரூக்கானுடன் 'ஜவான்' , சீரஞ்சிவியுடன் 'காட் பாதர்' ஆகிய படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக இருப்பதால், ஹனிமூன் பிளானை ஒத்தி வைத்துள்ளாராம். இதனால், விக்னேஷ் சிவன் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்.


 மேலும் படிக்க ....திருமணத்தில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்...மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட கத்ரினாவின் காஸ்ட்யூம் டிசைனர் குழு

click me!