வெற்றிமாறனின் ரியல் அன்பு கேங் இவங்கதான்... குடும்பத்தோடு ஃபாரின் ட்ரிப் சென்ற வெற்றிமாறனின் கலக்கல் கிளிக்ஸ்

First Published Feb 4, 2024, 8:38 AM IST

விடுதலை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மகன், மகளோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

vetrimaaran Family

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், கடந்த 2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷ் உடன் இணைந்து ஆடுகளம் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்தார். அப்படம் ஆறு தேசிய விருதுகளையும் அள்ளிச்சென்றது.

Director vetrimaaran wife and kids

இதையடுத்து லாக்கப் மரணங்களை மையமாக வைத்து விசாரணை என்கிற திரைப்படத்தை இயக்கினார். அப்படமும் மூன்று தேசிய விருதுகளை அள்ளிச் சென்றது. பின்னர் மீண்டும் தனுஷ் உடன் இணைந்த வெற்றிமாறன், வடசென்னை படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவின் தரமான கேங்ஸ்டர் படமாக இது திகழ்ந்து வருகிறது. இப்படத்திற்கு தேசிய விருதுகள் எதுவும் கிடைக்காத குறையை அசுரன் படம் மூலம் நிவர்த்தி செய்தார் வெற்றிமாறன்.

vetrimaaran son and Daughter

தனுஷ் வெற்றிமாறன் காம்போ நான்காவது முறையாக இணைந்த அசுரன் திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது. அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூரி உடன் கூட்டணி அமைத்த வெற்றிமாறன் விடுதலை படத்தை எடுத்தார். காமெடி நடிகரான சூரியை சீரியஸான ரோலில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டார். விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ரோட்டர்டேம் படவிழாவில் வேறலெவல் சம்பவம் செய்த விடுதலை 2! வெற்றிமாறனுக்கு கிடைத்த 5 நிமிட கைதட்டல்

vetrimaaran daughter Poonthendral

அப்படம் நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டேம் திரைப்படம் விழாவில் திரையிட தேர்வாகி இருந்தது. அங்கு விடுதலை 2 திரைப்படம் திரையிடப்பட்டபோது படத்தை பார்த்து மெர்சலான பார்வையாளர்கள் சுமார் 15 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி வெற்றிமாறனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த ரோட்டர்டேம் பட விழாவிற்கு பின்னர் தனது பேமிலியோடு நெதர்லாந்தின் ஜாலியாக அவுட்டிங் சென்றிருக்கிறார் வெற்றிமாறன்.

vetrimaaran Family Vacation Photos

வெற்றிமாறனுடன் அவுட்டிங் சென்ற புகைப்படத்தை அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் வெற்றிமாறனின் மகன் கதிரவன் மற்றும் மகள் பூந்தென்றல் ஆகிய இருவருமே மளமளவென வளர்ந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் வெற்றிமாறனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா என வாயடைத்துப் போய் உள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனும் அவரது மனைவி ஆர்த்தியும் காதல் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அட்லீ வசனத்தில்.. வெற்றிமாறன் இயக்கத்தில்.. நான் நடிக்க ஒப்பந்தமானேன் - Drop ஆனா படம் குறித்து பேசிய பிரபலம்!

click me!