4, 4, 4, 6, 4, 6 என்று பின்னி பெடலெடுத்த ஜாக் ஃபிரேசர் மெக்கர்க் – 4ஆவது முறையாக அரைசதம் அடித்து சாதனை!

First Published May 7, 2024, 8:37 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 56ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஜாக் ஃபிரேசர் மெக்கர்க் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Delhi Capitals vs Rajasthan Royals

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 56ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியில் அபிஷேக் போரெல் மற்றும் ஜாக் பிரேசர் மெக்கர்க் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

DC vs RR IPL 2024

சந்தீப் சர்மா வீசிய 2அவது ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. மீண்டும் வந்த போல்ட் ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 4ஆவது ஓவரை ஆவேஷ் கான் வீசினார். இந்த ஓவரை மெக்கர்க் எதிர்கொண்டார். முதல் பந்து முதலே அதிரடி தான். 4, 4, 4, 6, 4, 6 என்று அந்த ஓவர் முழுவதும் பேட் செய்த மெக்கர்க் 28 ரன்கள் எடுத்து 19 பந்துகளில் அரைசதமும் அடித்தார். இதன் மூலமாக இந்த சீசனில் 4ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார்.

DC vs RR, Jake Fraser-McGurk

இந்த சீசனில் மெக்கர்க் விளையாடிய 7 போட்டிகளில் 55, 20, 65, 23, 84, 12, 50 என்று ரன்கள் குவித்துள்ளார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த மெக்கர்க் அடுத்த பந்தில் அஸ்வின் ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் 2 முறை 15 பந்துகளில் அரைசதம் அடித்த மெக்கர்க் இன்றைய போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்.

Jake Fraser-McGurk

மேலும், 20 பந்துகளுக்குள் அதிக முறை அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜாக் ஃபிரேசர் மெக்கர்க் 3 முறை அடித்து முதலிடம் பிடித்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிக்கோலஸ் பூரன், இஷான் கிஷான், சுனில் நரைன், கெரான் போலார்டு, டிராவிஸ் ஹெட், கேஎல் ராகுல் ஆகியோர் 2 முறை அரைசதம் அடித்துள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!