STR48க்கு என்ன தான் ஆச்சு.. ஒரு படத்தால் டிலேயாகும் சிம்புவின் இரு படங்கள்? - வெயிட்டிங்கில் சுதா கொங்கரா!

First Published Jun 24, 2024, 4:32 PM IST

Silambarasan : பிரபல நடிகர் சிலம்பரசன் இப்பொது மூத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் Thug Life திரைப்பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

Uravai Kaatha Kili

தமிழ் திரை உலகில் தனது முதலாவது வயது முதல் நடித்து வரும் வெகு சில நடிகர்களில், பிரபலமானவர் சிலம்பரசன் என்பது பலர் அறிந்த உண்மை. அவரது தந்தை, இயக்குனர் மற்றும் நடிகரான டி. ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984ம் ஆண்டு வெளியான "உறவை காத்த கிளி" என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானார், அப்போது அவருக்கு வயது 1.

Nagarjuna : முதியவரை தரதரவென இழுத்த பவுன்சர்... பதறிப்போன தனுஷ் - மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா

Kamal

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பயணித்து வரும் நடிகர் சிம்பு, அண்மையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம் மூலம் பிரபலமான இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், தனது 48வது பட பணிகளை தொடங்கினார். ஆனால் இப்போது அப்பட பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் "Thug Life" படப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Thug Life

கமலின் அரசியல் பணிகள் காரணமாக Thug Life பட பணிகள் டிலேயான நிலையில், அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அப்பட பணிகளை தொடங்கினார். சிம்பு, அபிராமி, கமல் மற்றும் நாசர் என்று பல நடிகை, நடிகர்கள் அந்த படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் இனி இப்பட பணிகளை முடித்தால் மட்டுமே சிம்பு தனது அடுத்த பட பணிகளை துவங்க முடியும்.

sudha kongara

ஆகவே Thug Life படத்தில் தனது பகுதிகளை முடிக்கும் சிம்பு, மீண்டும் STR48 பட பணிகளை துவங்குகிறார். அதன் பிறகு தான் ஏற்கனவே முடிவான பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் படத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கார்த்திகை தீபம் சீரியல் : துப்பாக்கியில் கைரேகை... அபிராமியை சுட்டது ஆனந்தா? ரியாவா? ஷாக் கொடுத்த போலீஸ்

Latest Videos

click me!