ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, சிறிய திருத்தங்களுடன் திங்கள்கிழமை மீண்டும் நிறைவேறியது. முந்தைய தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தை கேளர சட்டப்பேரவை நிறைவேற்றி இருக்கிறது.
கேரள சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை 'கேரளா' என்பதில் இருந்து 'கேரளம்' என்று மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெயரை மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தும் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, சிறிய திருத்தங்களுடன் திங்கள்கிழமை மீண்டும் நிறைவேறியது. முந்தைய தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தை கேளர சட்டப்பேரவை நிறைவேற்றி இருக்கிறது.
முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த இந்தத் தீர்மானத்தில், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் உள்ள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஐயுஎம்எல் எம்எல்ஏ என் ஷம்சுதீன் தீர்மானத்தில் ஒரு திருத்தத்தை கொண்டுவந்தார். ஆனால், அந்தத் திருத்தத்தை சபை நிராகரித்தது.
வேலையே செய்யாத ஊழியருக்கு முழு சம்பளம் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனம்!
மத்திய அரசு தீர்மானத்தைத் திருப்பி அனுப்பியதை அடுத்து, விரிவான சட்ட ஆலோசனைக்குப் பிறகு, அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் மட்டுமே பெயர் மாற்றத்துக்கான திருத்தம் தேவை என்று கண்டறியப்பட்டது. அதனால் புதிய தீர்மானம் கொண்டு வரப்படுகிறது என முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாளத்தில் ‘கேரளம்’ என்ற பெயர்தான் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் முதல்வர் பினராயி விஜயன் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அதிகாரப்பூர்வ பதிவுகளில் மாநிலத்தின் பெயர் இப்போது ‘கேரளா’ என்றே உள்ளது. அதை கேரளம் என்று மாற்றவே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான தீர்மானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற இந்த தீர்மானம் வலியுறுத்தியது. இதேபோல் எட்டாவது அட்டவணையின் கீழ் அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்ற பெயரை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும் தீர்மானத்தில் கோரப்பட்டது.
குடும்ப தலைவிக்கு ரூ.1000 தான்... குடிச்சு செத்தால் ரூ.10 லட்சம்... கேவலம்... சீறும் சீமான்!