பாஜகவில் முக்கிய விக்கெட் காலி.. மகாராஷ்டிராவில் மாறும் களம்.. சரத் பவாரின் என்சிபி கொடுத்த திடீர் ட்விஸ்ட்!

By Raghupati R  |  First Published Jun 24, 2024, 2:16 PM IST

பாஜகவில் இருந்து விலகி என்சிபிக்கு திரும்பும் சூர்யகாந்த பாட்டீலின் முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இன்று மாலை அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார்.


நேற்று (ஜூன் 23) பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் சூர்யகாந்த பாட்டீல் இன்று மீண்டும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (என்சிபி) சேர வாய்ப்புள்ளது. 2014-ல் பாஜகவில் இணைந்த பாட்டீல், சமீப நாட்களாக அக்கட்சி மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் இன்று மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் NCP (SP) தலைவர் சரத் பவார் முன்னிலையில் NCP இல் அதிகாரப்பூர்வமாக மீண்டும் இணைகிறார்.

அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான சூர்யகாந்த பாட்டீல், ஹிங்கோலி மக்களவைத் தொகுதியில் பாஜக சீட்டைக் கோரினார். இருப்பினும், அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட் மறுக்கப்பட்டது. அவர் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பாட்டீல் தனது ராஜினாமா அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன், கட்சிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

undefined

குறிப்பிடத்தக்க வகையில், ஹிங்கோலி-நாந்தேட் தொகுதியை நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் பாட்டீல். அவர் ஊரக வளர்ச்சி அமைச்சகத்திலும், பின்னர் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்திலும் இணை அமைச்சராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யகாந்த பாட்டீல் - அரசியல் வாழ்க்கை:

1970-1972: ஜனசங்கத் தலைவர் மற்றும் பாஜக மகிளா அகாடி தலைவர்
1980: காங்கிரஸ் சார்பில் ஹட்கான் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1980-1985: சட்டமன்ற உறுப்பினர்
1986: ராஜீவ் காந்தியால் ராஜ்யசபாவுக்கு நியமிக்கப்பட்டார்
1991: நான்டெட் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸிலிருந்து 137,000 வாக்குகள் பெற்று சாதனை படைத்தார்.
1996: லோக்சபா தேர்தலில் ஹிங்கோலியில் இருந்து காங்கிரசுக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றார்
1999: என்சிபியில் சேர்ந்தார்
1998: மக்களவைத் தேர்தலில் ஹிங்கோலியில் இருந்து NCP வேட்பாளராக வெற்றி பெற்றார்
2004: என்சிபியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2009: மக்களவைத் தேர்தலில் தோல்வி
2014: ஹிங்கோலியில் இருந்து ராஜீவ் சதாவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியதை அடுத்து பாஜகவில் இணைந்தார்.

ADMK : 60 பேரின் ஆவிகள் ஸ்டாலினையும், மா.சுப்பிரமணியத்தையும் சும்மா விடாது.!! இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

click me!