தேனியில் திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஒலிபெருக்கி மூலம் இசைக்கப்பட்ட பாடலுக்கு பெண் சாலையில் உருண்டு புரண்டு நடனம் ஆடிய காட்சி வைரல் ஆகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெண்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கேயே தீக்குளித்து சாவேன்; திமுக.விற்கு எதிரான போராட்டத்தில் கார் மீது நின்று ஓ.எஸ்.மணியன் ஆவேசம்
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலைந்து சென்ற போது அதிமுக கட்சியின் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது. அப்போது பெண் ஒருவர் அதிமுக கண்டன கோஷங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு பாடலுக்கு திடீரென நடனமாடத் தொடங்கினார்.
வி.சி.க.வுக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்த மாமன்னன்; திருமாவுக்கு விழா எடுத்து கொண்டாடிய இளம் பெண்கள்
ஆக்ரோஷமாக சாலையில் உருண்டு புரண்டுக்கொண்டு பாட்டிற்கு நடனமாடிய பெண்ணை சாலையில் நடந்து செல்வோர் பார்த்துக்கொண்டே சென்ற நிலையில் பின்னர் பெண் போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.