பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் சாதி மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு சமர்ப்பித்த அறிக்கை நகலை தேனி ஊராட்சி குழு துணைத்தலைவர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே சாதிய மோதல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு பல்வேறு தரப்புகளிடம் கருத்துக்களை கேட்ட பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில், மாணவர்கள் கையில் கயிறு கட்டுவதால் சாதி அடையாளம் வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால் பள்ளிகளில் கையில் கயிறு கட்டுவதை தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில் ஊராட்சிக் குழு தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையின் நகல் குறித்து கூட்டத்தில் பேசிய போது மாணவர்கள் கையில் கயிறு கட்டக் கூடாது எனக் கூறுவது இந்து மத நம்பிக்கைக்கு எதிராக, அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி சந்துரு சமர்ப்பித்த அறிக்கையின் நகலை கூட்டத்தில் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாமக.வுக்கு தைரியமா? வாக்கு வங்கியை சோதிக்கவே விக்கிரவாண்டியில் போட்டி - செல்லூர் ராஜூ விமர்சனம்
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பல்வேறு தரப்பினரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்களை வைத்து நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் ஒரு நபர் குழு சமர்பித்த அறிக்கைக்கு எதிராக நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.