வெளிநாடு செல்லும் கனவில் காரில் சென்ற வாலிபர்; திடீரென கொழுந்துவிட்டு எரிந்த கார் - தேனியில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jun 6, 2024, 10:33 PM IST

தேனி போடிமெட்டு அருகே கொச்சி விமான நிலையத்திற்கு சென்ற கார் திடீரென தீப் பிடித்து எரிந்த நிலையில், காரில் பயணம் செய்த இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது போடி மெட்டு மலைச்சாலை. தமிழக, கேரள எல்லை பகுதியை இணைக்கும் இந்த மலைச்சாலை சுமார் 21 கிலோமீட்டர் தொலைவும் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகளும், இடுக்கி மாவட்டம் வழியே கொச்சின் விமான நிலையம் செல்லும் பயணிகளும் இந்த வழியாக செல்கின்றனர்.

Ramadoss: ஜூலை 1 முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமல்? அரசுக்கு இராமதாஸ் கோரிக்கை

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் இருந்து கார்த்திக் ராஜா, ராம்பிரகாஷ், வைஷ்ணவ் ஆகிய மூன்று நபர்கள் கொச்சின் ஏர்போர்ட்டிற்கு வெளிநாடு செல்வதற்காக போடி மெட்டு மலைச்சாலை வழியே காரில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் போடிமெட்டின் 17 வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென்று கார் நின்று விடவே காரை ஓட்டி வந்த கார்த்திக் ராஜா வண்டியை  ஸ்டாட் செய்ய முயற்சிசெய்துள்ளார்.

ஆடா? முடிந்தால் என் மீது கை வையுங்கள்; திமுகவினருக்கு அண்ணாமலை பகிரங்க சவால்

ஆனால் எதிர்பாராத விதமாக வண்டியின் எஞ்சினில் திடீரென்று குபுகுபுகுவென்று புகை கிளம்பியதுடன் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. அதனைக் கண்ட மூன்று நபர்களும் உடனடியாக காரை விட்டு இறங்கி தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்ட நிலையில் காரில் பரவிய தீ கார் முழுவதும் பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து நெருப்பை அணைக்க முயற்சி செய்த நிலையில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து குரங்கணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

click me!