Sellur Raju: பாமக.வுக்கு தைரியமா? வாக்கு வங்கியை சோதிக்கவே விக்கிரவாண்டியில் போட்டி - செல்லூர் ராஜூ விமர்சனம்
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போாட்டியிட்டால் அதிமுகவும் தனித்து நிற்க தயார் என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் காளவாசலில் உள்ள மேற்கு சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் 21 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இ-சேவை மையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார், இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறுகையில், “பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என ஏற்கனவே கூறி விட்டோம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது குறித்து ஏற்கனவே தெளிவாக கூறி விட்டோம். திமுக சட்டத்துக்கு புறம்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் செயல்படும் என்பதால் தேர்தலை புறக்கணித்து இருக்கிறோம். அப்புறம் எப்படி எங்களை பாஜகவின் பீ டீம் என கூற முடியும்? பாமக விக்கிரவாண்டியில் தைரியமாக போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவிற்கு உள்ள வாக்கு வங்கியே தெரிந்து கொள்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறது, விக்கிரவாண்டியில் பாமக வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என அவர்களுக்கே தெரியும்.
பக்கவாதத்தால் முடங்கிய குடும்ப தலைவர்; வாடகை வீட்டு உரிமையாளரின் செயலால் குடியிருப்புவாசிகள் கலக்கம்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. காங்கிரசை கட்டி காக்க ராகுல் காந்தி விடா முயற்சி எடுத்து வருகிறார். ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் பேசி வருகிறது. கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா?
TTR: மதுரையில் விரைவு ரயிலில் ஒரிஜினல் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கேட்டு வசமாக மாட்டிய போலி TTR
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னம் அல்லாமல் தனி சின்னத்தில் போட்டியிட தயாரா? 2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மக்களுக்காக திமுக சாதனை திட்டங்களை கொண்டு வந்திருந்தால் தனித்தே போட்டியிடலாமே?" என கூறினார்.