Illicit liquor in kallakurichi: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி; கிராம மக்கள் கொந்தளிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி ஒரே பகுதியைச் சேர்ந்த 5 பேர் பலியான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் அந்த பகுதியில் மறைத்து வைத்து கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கள்ளச்சாராயத்தை அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்ததாகக் கூறப்படுகிறது.
அதில் தற்போது கள்ளச்சாராயம் அருந்தியதில் ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர், மற்றுமொரு ஜெகதீஷ் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகையில், கல்வராயன் மலைப்பகுதியில் காவல் துறையினருக்கு சிலர் பணம் கொடுத்துவிட்டு இரகசியமாக சாராயம் தயாரித்து அதனை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் தான் உயிர்பலி ஏற்படுவதாக குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் கடைசி உயிரிழப்பு இதுவாக இருக்கட்டும்.
பக்கவாதத்தால் முடங்கிய குடும்ப தலைவர்; வாடகை வீட்டு உரிமையாளரின் செயலால் குடியிருப்புவாசிகள் அச்சம்
இதன் பிறகாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போன்று விழுப்புரம், மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அதே போன்று மற்றொரு சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.