School College Holiday: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம்? எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

First Published Dec 27, 2023, 6:29 AM IST

புகழ்பெற்ற ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Hethaiamman festival

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி, ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா ஆகிய 8 கிராமங்களில் உள்ளவர்கள் இப்பண்டிகையின் போது விரதம் இருந்து பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில், இப்பண்டிகையை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

nilgiris district collector

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

School Holiday

மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 6-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!