Gold Rate Today: ரூ.50 ஆயிரத்தை தொடப்போகும் தங்க விலை; இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?

First Published Mar 25, 2024, 10:38 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இங்கு காணலாம்.

Today Gold Rate in Chennai

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது.

Today Gold Rate

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், மக்கள் வாங்குவது மட்டும் குறையவில்லை.

Today Silver Rate

நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.49,480-ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,185-ஆகவும், 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,655 ஆகவும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Gold Rate Today

இன்றைய நிலவரப்படி(மார்ச் 25), சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,205க்கும் விற்பனையாகிறது.

Gold Price Today

வெள்ளி விலையை பொறுத்தவரை,  30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80 மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

click me!