Relationship Tips : ஒவ்வொரு கணவனும் மனைவியிடம் அன்பையும் தாண்டி எதிர்பார்ப்பது 'இதை' தான்!

First Published Apr 26, 2024, 10:30 PM IST

திருமணத்திற்குப் பிறகு, கணவன் மனைவியிடம் அன்பையும் தாண்டி சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள். அது என்வென்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.

திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு ஆகும்.. திருமணம் என்பது மிகவும் உணர்திறன் வாய்ந்த உறவு. எனவே, இந்த உறவில் அன்பு, நல்ல நடத்தை, நம்பிக்கை எப்போதும் பராமரிக்கப்பட வேண்டும். உண்மையில், இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதன் மூலம் மட்டுமே இருவருக்குமான உறவு உயிரோட்டமாகவும் அன்பாகவும் இருக்கும். ஆனால், திருமணத்திற்குப் பிறகு, கணவனுக்கு மனைவியிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுவும் அன்பு மட்டுமல்ல.. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நம்பிக்கை: திருமண உறவில் நம்பிக்கை முக்கியமானது. கணவன் மனைவி இருவருக்கும் இது மிகவும் அவசியம். ஒவ்வொரு கணவனும் தன் மனைவி தன்னை எப்போதும்.. எந்த நேரத்திலும் நம்ப வேண்டும் என்று விரும்புகிறான். உண்மையான நம்பிக்கையே திருமண உறவின் அடித்தளமாகும்.

நேர்மை: எந்தவொரு உறவிலும் நேர்மை மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு கணவன்மார்களும் தங்கள் மனைவியுடனான உறவில் ம
நேர்மையை விரும்புகிறார்கள். திருமண உறவில் நேர்மை, முற்றிலும் வெளிப்படையானதாகவும்.. தூய்மையாகவும் ஆக்குகிறது. 

புரிதல்: திருமண வாழ்க்கையில் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் தேவைகள், ஆசைகள், விருப்பு வெறுப்புகளை புரிந்துகொள்வது அவர்களின் பிணைப்பை மேம்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவன் எப்போதுமே தன் மனைவி தன் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான்.

கவனம்: கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு கணவனும் தன் மனைவி தன்னை நன்றாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறான். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் சரியாக நடத்தும்போதுதான் தாம்பத்திய பந்தத்தின் அடித்தளம் வலுவாக இருக்கும்.

மரியாதை: உறவில் பரஸ்பர மரியாதை அவசியம். பரஸ்பர மரியாதை என்பது கணவன் மனைவியின் கூட்டுப் பொறுப்பு. மனைவி எப்போதும் தன் கணவன், அவனது எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகளை மதிக்க வேண்டும். இந்த விஷயத்தில், கணவன் மனைவிக்கு சமமான மரியாதை கொடுக்க வேண்டும்.

click me!