தலைவரே நீங்களா இது.. பிக் பாஸ் பிரபலம் ஜி.பி முத்து வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்..

First Published Oct 12, 2023, 12:04 AM IST

டிக் டாக் புகழ் ஜிபி முத்து என்று சொன்னால் தமிழகத்தில் தெரியாத ஆளே இல்லை என்று சொல்ல வேண்டும். ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

GP Muthu New Movie

ஒரு சில நேரங்களில் யதார்த்தமாக இரட்டை அர்த்தங்களில் பேசி தானாகவே சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு மன்னிப்பு கேட்டு கிராமத்து எளிமையை கண்முன் கொண்டு வந்துவிடுவார் ஜிபி முத்து.

GP Muthu

மிகவும் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்த ஜி.பி.முத்துவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்து பணம், புகழ் கிடைக்கும் போதும் தனது பழசை மறக்காமல், இன்னமும் தன்னுடைய வெகுளித்தனத்துடன் இருப்பது தான் இவரது பலமாக கருதப்படுகிறது.

gp muthu instagram

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாகவும் கலந்து கொண்டார். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

gp muthu videos

பிறகு திடீரென அவரே வெளியேறினார். இருப்பினும் ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் பட்டாளம் குறையவில்லை. தமிழ் சினிமாவில் சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வரும் ஜிபி முத்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

gp muthu latest video

இதுகுறித்து ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆர்வன் என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை மணி ஆரவ் என்பவர் இயக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிபி முத்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

click me!