அதிமுகவில் தாய்ப்பாலை குடித்துவிட்டு இன்று விஷப்பாலை ஊட்ட நினைக்கிறார் ரகுபதி - உதயகுமார் விமர்சனம்

By Velmurugan s  |  First Published May 13, 2024, 6:27 PM IST

'தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைக்கின்ற அமைச்சர் ரகுபதி தனது விஷம பிரசாரத்தை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது' என ஆர் பி உதயகுமார் பேச்சு.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், எடப்பாடி அரசு வெற்றி சரித்திரத்தை பொறுத்துக் கொள்ளாமல் வயிற்று எரிச்சலிலே வாய் கொழுப்பு எடுத்து சில நபர்கள் சில புரளிகளை கிளப்புகிறார்கள். 

இது மக்களிடத்திலே மட்டுமல்ல தொண்டர்களிடத்திலும் குழப்பம் ஏற்படுத்துகின்ற விஷம பிரசாரம் இதை இத்தோடு அமைச்சர் ரகுபதி நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது. ஏனென்றால் அவருக்கு தாய்ப்பால் கொடுத்த இயக்கம் அதிமுக. தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைக்கின்றார். இது மிகப்பெரிய பாவச் செயல்.

Latest Videos

திருவிழாவை பார்த்துவிட்டு அசதியில் தண்டவாளத்தில் உறங்கிய இளைஞர்கள்; ரயிலில் சிக்கி ஒருவர் பலி, இருவர் படுகாயம்

சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள். ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தான் சட்டத்துக்கு முதல் முன்மாதிரியாக கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் சட்டத்திற்கு நான் பயப்பட மாட்டேன் என்று அவர் கூறுவது வீராப்பு கதையை கட்டவிழ்த்து விடுவதாக தான் இருக்கும். இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை அதற்கு சட்டம் அனுமதிக்காது. இவரைப் போல் வீர வசனம் பேசுபவர் எல்லாம் அரசியல் களத்திலே காணாமல் போயிருக்கிறார்கள். அந்த நிலைமை இவருக்கும் ஏற்படலாம். 

தனிமையில் சிக்கிய சிறுமி; 3 சிறுவர்கள் உள்பட 9 நபர்களால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - திருப்பூரில் பரபரப்பு

காவல்துறையை சுந்தரமாக பணி செயல்பட வைத்தால் குற்ற சம்பவங்களை நடக்காமல் அவர்கள் தடுக்க முடியும். எந்த நாட்டிலும், எந்த மாநிலத்திலும், சர்வாதிகாரத்திற்கு மக்கள் ஆதரவாக நிற்பதில்லை. யார் வேண்டுமானாலும், எந்த பதவிக்கும் வரலாம். அதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவில் பல தலைவர்களை சாமானியர்கள் உருவாகியுள்ளனர். சர்வாதிகாரத்தைக் கொண்டு, அடக்குமுறை கொண்டு இந்த நாட்டிலே ஜனநாயகத்தை காப்பாற்றி விடலாம் என்று நினைத்தால் அது பொய்த்து போய்விடும். இதற்கெல்லாம் சேர்த்து இந்த நாடாளுமன்றத் தேர்தல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என்றார்.

click me!