யூடியூபை பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி! வசமாக சிக்கிய பட்டதாரி வாலிபர்! போலீசில் அளித்த பகீர் வாக்குமூலம்

By vinoth kumar  |  First Published May 12, 2024, 3:54 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் லெனின் (30). இவர் எம்பிஏ படித்துவிட்டு சென்னையில் ஐசிஐசி வங்கியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கு ஊதியம் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். 


உசிலம்பட்டியில் வங்கியில் திருட சென்ற பட்டதாரி வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து  கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் லெனின் (30). இவர் எம்பிஏ படித்துவிட்டு சென்னையில் ஐசிஐசி வங்கியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கு ஊதியம் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். பொழுதுபோகாமல் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட ஆரம்பித்து அதில் சுமார் ரூ.5 லட்சம் வரை இழந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் இழந்த பணத்தை திருப்பி பெற முடியாமல் என்ன செய்வது என்று நினைக்கும் போது யூடியூபில் வங்கியில் திருடுவது எப்படி அதற்கான உபகரணங்கள் என்னென்ன என பார்த்து அதனை ஆன்லைன் மூலம் உபகரணங்களை வாங்கி வைத்துள்ளார்.  இதன்படி உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள தனியார் வங்கியான முத்தூட்  வங்கியில்; பணம் நகை இருக்கும் என முடிவு செய்து நேற்று நள்ளிரவு வங்கியின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். 

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற எஸ்எஸ்ஐ சாந்தி மற்றும் காவலர் அன்பு குமார் ஆகியோர் சென்றபோது வங்கியிலிருந்து யாரோ ஒருவர் தப்பிச் செல்வது அறிந்து வாகனத்தை நிறுத்தி வங்கி அருகில் சென்று சோதனை செய்தனர். அப்போது முத்தூட் வங்கி பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதும் வங்கியின் கீழே  இருசக்கர வாகனமும் அதில் பூட்டை உடைக்க பயன்படுத்தும் உபகரணங்களும் இருப்பது தெரியவந்தது.  அதனை தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது இருட்டில் பதுக்கியிருந்த லெனினை பிடித்தனர்.விசாரணையில் லெனின் முத்தூட் வங்கியை பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் பூட்டை உடைக்க பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்யப்பட்டது. லெனின் இடம் விசாரணை செய்தபோது தான் ஆன்லைனில் ரம்மி விளையாடிய பணம் இழந்ததாகவும் அந்த பணத்தை திருப்பி கட்டுவதற்காக இதுபோல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

click me!