Sukran Peyarchi 2022: இன்று சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி....இந்த ராசிகளுக்கு உலகை ஆளும் யோகம் கிடைக்கும்..

First Published Jun 22, 2022, 3:06 PM IST

Sukran Peyarchi 2022 Palangal: சுக்கிரன் 2022  ஜூன் 22 அன்று அதாவது இன்று கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். இப்பெயர்ச்சியால் மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அப்படி யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

sukran peyarchi 2022

சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி 2022:

ஜோதிடத்தின் பார்வையில், ஆடம்பர வாழ்க்கையின் காரணியான பொருள் இன்பம், செல்வம், புகழ், படிப்பு , பேச்சு மரியாதை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.  ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் நிதி நெருக்கடியால் அவதிப்படுவார். அதே நேரத்தில், சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, ​​அந்த நபர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அப்படியாக, சுக்கிரன் ஜூன் 22  அதாவது இன்று, மாலை 5 மணியவில் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

sukran peyarchi 2022

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். புதிய பணி கிடைக்கும் வாய்ப்பு தென்படுகிறது. வருமானம் பெருகும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. நீண்ட நாட்களாக உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள், இருந்தால் விரைவில் அதிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பணத்தை சேமிக்கும் யோகம் உண்டு.

sukran peyarchi 2022


மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. லாபம் பெருகும், வியாபாரம் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். மொத்தத்தில், இந்த சுக்ர பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். 

sukran peyarchi 2022

சிம்மம்:

 சுக்ரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும். பண வரத்து அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணம் திரும்ப வரும். தொழிலில் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்துக்கிடந்த விஷயம் நிறைவேறும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரம் இதுவாகும். செல்வம் பெருகும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.

sukran peyarchi 2022

மகரம்:

இந்த காலகட்டத்தில் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு அரசுவேலை கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதான சூழல் உருவாகி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண யோகம் கைகூடும். போட்டித் தேர்வில் வெற்றி நிச்சயம். 

மேலும் படிக்க....July month Horoscope 2022: ஜூலை மாதம் முழுவதும் குபேரனின் நேரடி அருள் பெறும் ராசிகள்...உங்கள் ராசி என்ன..?

click me!