Shani Peyarchi: ஜூலை 12 சனியின் பிற்போக்கு நகர்வு...குபேர யோகம் பெரும் மூன்று ராசிகள்...நீங்கள் என்ன ராசி..?

First Published Jun 6, 2022, 12:55 PM IST

Shani Peyarchi Palangal 2022: நீதியின் கடவுளான சனி பகவான் ஜூலை 12 முதல் வக்ர நிலையில் இருக்கப் போகிறார். சனி பகவானின் பிற்போக்குத்தனத்தால் குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். உங்கள் ராசி இதில் இருக்கா..? என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Shani Peyarchi 2022

ஜூலை 12-இல்  சனியின் பிற்போக்கு நகர்வு:

நவக்கிரங்களிலேயே சனி பகவான் முக்கியமானவர். ஆனால், மற்ற கிரகங்களை ஒப்பிடுகையில் மெதுவாக நகரும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே, தனது ராசியை மாற்றிவிடுகிறது. இறுதியில், சனி பகவான் 12 ராசிகளை சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும். 
 

Shani Peyarchi 2022

 ஜோதிடத்தின் பார்வையில், மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படும் சனி பகவான், ராசி மாறும் போதெல்லாம் பல்வேறு பலன்களை தருவார். கர்ம பலன்களைத் தரும் சனி தேவன் ஜூலை 12-ம் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அதன்படி சனி தற்போது கும்பத்தில் இருந்து மகரத்திற்கு வக்ர நிலையில் இருக்கும், இது 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு சனி பகவானின் நேரடி அருள் கிடைக்கும். எனவே, அவை எந்தெந்த 3 ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

shani

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு நகர்வு ஜூலை 12க்கு பிறகு வாழ்கை தலைகீழாய் மாறும். நிதி நிலை வலுவடையும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரத்தில்   சனிபகவான் லாபம் தருவார். நினைத்த வேலையை நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரியுடன் நல்லுறவு உருவாகும். வாழ்வில் அதிக பாராட்டுகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். பண வரவு அதிகரித்து காணப்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.

shani

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு நகர்வு ஜூலை 12க்கு பிறகு, சுப பலன் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடக்கும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். பண ஆதாயம் அதிகரிக்கும். தொழில்-வியாபாரத்திற்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.

shani

மகரம்:

மகரம் என்பது சனி பகவானின் சொந்த ராசியாகும். சனியின் பிற்போக்கு நகர்வு ஜூலை 12க்கு பிறகு, உங்களுக்கு மங்களகரமானதாகவும் நன்மை பயக்கும் வகையிலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பணம் சம்பாதிக்க உங்களுக்கு வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சி, செழுமை மற்றும் சிறப்பான வாழ்க்கையை இந்த காலத்தில் எதிர்பார்க்கலாம்.  நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். வெற்றி வாய்ப்பு உங்களை தேடி வரும்.

மேலும் படிக்க...Shukra Peyarchi :ஜூன் 22ல் கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிக்கு அதிர்ஷ்டமானதாக இறுக்கப் போகுதாம்..

click me!