ரிலீசாகி 15 நாட்களில் லியோ படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? அப்போ இனி ஜெயிலர் வசூலை கிட்ட கூட நெருங்க முடியாதே!

First Published Nov 3, 2023, 1:16 PM IST

லியோ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 15 நாட்களே ஆகும் நிலையில், அதன் ஹெச்.டி பிரிண்ட் இணையத்தில் லீக் ஆகி உள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

vijay

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, மிஷ்கின், சாண்டி, கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், பிக்பாஸ் ஜனனி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், நடிகர் மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

Leo vijay

ஷூட்டிங் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்து கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியது லியோ படக்குழு. இப்படம் வெளியாகி உலகளவில் பல்வேறு இடங்களில் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக இதன் வசூல் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், இப்படம் 10 நாளில் ரூ.540 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

leo movie leaked

இதே வேகத்தில் சென்றால் ஜெயிலர் படத்தின் ரூ.650 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை லியோ ஈஸியாக முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது திடீர் டுவிஸ்ட் ஆக லியோ படத்தின் ஹெச்.டி பிரிண்ட்டை பைரசி தளங்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் கசியவிட்டுள்ளன. படம் ரிலீசாகி 15 நாட்களில் லியோ ஹெச்.டி. பிரிண்ட் வெளியாகி உள்ளது அப்படத்தின் வசூலை பெரியளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.

Leo HD Print Leaked

இதனால் லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனைக்கு கிட்ட கூட நெருங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. லியோ சக்சஸ் மீட் முடித்து படக்குழு அனைவரும் ஹாப்பியாக இருந்த சமயத்தில் அவர்களுக்கு இந்த சம்பவம் பேரிடியாக அமைந்துள்ளது. இதனை இணையத்தில் இருந்து நீக்கும் வேலைகளில் படக்குழு இறங்கி உள்ளது. லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 17ந் தேதி ஓடிடியில் ரிலீசாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நான் சொன்ன கதையத்தான் மேடைல உருட்டிட்டு இருந்தியா? விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு உரிமை கொண்டாடும் ப்ளூ சட்டை

Latest Videos

click me!