
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அலக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் வையாபுரி. இவரது மனைவி பாப்பாத்தி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். வையாபுரி நேற்று (ஜூன்.20) வயிற்று வலி காரணமாக தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்; விக்கிரவாண்டி இடைதேர்தலில் களம் காணும் ஸ்ரீமதியின் தாயார்
இது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை எதிர்த்து வையாபுரி குடும்பத்தினர். வையாபுரிக்கு மரம் ஏற தெரியாது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர் மரம் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
வையாபுரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக உள்ள சாலையை மறைத்து மறியலில் ஈடுபட்டனர். பின் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அங்கிருந்து கலைந்து சென்றனர்.