வசூலில் சரிவை சந்தித்ததா லியோ?... உலகளவில் 6 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு? முழு விவரம் இதோ

First Published Oct 25, 2023, 12:21 PM IST

ஆயுத பூஜை விடுமுறை முடிவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சரிந்ததா என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Leo

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது. விமர்சகர்கள் மத்தியில் லியோ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸுக்கு இப்படம் மிகவும் பிடித்துப் போனதால், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது லியோ. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.148 கோடி வசூலித்து இருந்தது.

LEO box office

அதுமட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் அதிக வசூல் குவித்த தமிழ் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது லியோ. இப்படம் அம்மாநிலத்தில் மட்டும் ஆறு நாட்களில் ரூ.45 கோடி வசூலித்து உள்ளது. இன்னும் சில தினங்களில் கேரளாவில் அதிக வசூல் குவித்த படமாக இருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட சாதனையை லியோ முறியடிக்கும் என கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

LEO 6 days collection

அதேபோல் தமிழ் நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிவேகமாக ரூ.150 கோடி வசூலை வாரிக்குவித்த திரைப்படம் என்கிற சாதனையையும் லியோ படைத்துள்ளது. இப்படம் 6 நாட்களில் அந்த சாதனையை எட்டிப்பிடித்து உள்ளது. இதுவரை உலகளவில் லியோ திரைப்படம் 6 நாட்களில் ரூ.440 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக லியோ மாறி உள்ளது.

LEO Box Office report

இந்த ஆண்டு அதிக வசூலித்த தமிழ் படங்கள் லிஸ்ட்டில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. அப்படத்தின் சாதனையை லியோ திரைப்படம் இன்னும் சில தினங்களில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை முதல் நாள் மட்டுமே வெளியிட்ட செவன் ஸ்கிரீன் நிறுவனம், அடுத்தடுத்த நாட்கள் வசூலை வெளியிட வில்லை. இதனால் லியோ பட வசூல் சரிவை சந்தித்ததா என்கிற கேள்வியும் எழத்தொடங்கி உள்ளது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லியோ படக்குழு இன்று 6 நாட்கள் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... ரியல் லைஃபிலும் வர்மனாக மாறி போதையில் போலீசிடமே ரகளை செய்ததால் கைதான விநாயகன்... ஜாமீனில் விடுவிப்பு

click me!