Gopichand Hinduja
இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஹிந்துஜா குடும்பம் பிரிட்டனில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2024ல் இந்துஜாவின் சொத்து மதிப்பு சுமார் 2.196 பில்லியன் பவுண்டுகள் உயர்ந்து தற்போது 37.196 பில்லியனாக உள்ளது.
1940இல் பிறந்த கோபிசந்த் ஹிந்துஜா, வணிக வட்டாரங்களில் 'ஜிபி' என்று அழைக்கப்படுகிறார். இவர் இந்துஜா குழுமம் மற்றும் இந்துஜா ஆட்டோமோட்டிவ் லிமிடெட் ஆகியவற்றின் தலைவராக உள்ளார். இந்துஜா குழுமம் டிரக்குகள், லூப்ரிகண்டுகள், வங்கி மற்றும் கேபிள் தொலைக்காட்சி தொடர்பான வணிகங்களைக் மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனமாகும்.
Gopichand Hinduja in Sunday Times Rich List
கோபிசந்த், அவரது தந்தை பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜாவின் இரண்டாவது மகன். இந்தியாவின் சிந்து பகுதியைச் சேர்ந்த பர்மானந்த் ஹிந்துஜா, 1914இல் தனது வணிகத்தைத் தொடங்கினார். கோபிசந்த் 1959ஆம் ஆண்டு மும்பையில் இருந்தபோது தந்தையின் தொழிலில் இணைந்தார். கடந்த ஆண்டு மே மாதம் அவரது மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் ஹிந்துஜா இறந்ததை அடுத்து குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
87 வயதான கோபிசந்த் 1959இல் அன்றைய பாம்பே ஜெய்ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்றார். வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கெளரவ டாக்டர் பட்டத்தையும், லண்டனில் உள்ள ரிச்மண்ட் கல்லூரியில் பொருளாதாரத்திற்கான கெளரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Gopichand Hinduja becomes the richest in UK
கோபிசந்த் ஹிந்துஜா நான்கு சகோதரர்களில் ஒருவர். அவர்களில் இருவர் குடும்ப வணிக சாம்ராஜ்யத்தை கவனித்துக்கொண்டனர். ஆனாலும் இந்த நிறுவனம் ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ் மற்றும் அசோக் ஆகிய நான்கு சகோதரர்களுக்கும் சொந்தமானதாகவே உள்ளது.
பிரிட்டிஷ் அமெரிக்கத் தொழிலதிபரான லியோனார்ட் பிளாவட்னிக், சன்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் கோபிசந்த் ஹிந்துஜாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 621 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்து தற்போது 29.246 பில்லியன் பவுண்டுகளாக உள்ளது.