Kami Rita Sherpa
'எவரெஸ்ட் மேன்' என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா ஷெர்பா ஞாயிற்றுக்கிழமை காலை 29வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாறு படைத்துள்ளார்.
Kami Rita Sherpa
கமி ரீட்டா, அண்மையில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை அடைந்தார். 29வது முறையாக தனது மலையேற்றத்தைத் தொடங்கும் முன் பேசிய ரீட்டா, "சாகர்மாதாவில் (எவரெஸ்ட் சிகரத்தின் நேபாளப் பெயர்) இத்தனை முறை ஏற வேண்டும் என்று திட்டம் ஏதும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
Kami Rita Sherpa
செவன் சம்மிட் மலையேற்றத்திற்கு தலைமை தாங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 7:25 மணிக்கு கமி ரீட்டா எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார் என நேபாள சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
Kami Rita Sherpa
கமி ரீட்டாவின் வெற்றிகரமான 29வது எவரெஸ்ட் மலையேற்றத்துக்கு செவன் சம்மிட் ட்ரெக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காமி ரீட்டா காத்மாண்டுவில் இருந்து 28 மலையேறும் குழுவினருடன் தனது பயணத்தைத் தொடங்கினார். அவர்களின் வழிகாட்டியாக செயல்பட்டார்.
Kami Rita Sherpa
காமி ரீட்டா இப்போது உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் அதிக முறை ஏறியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சோலுகும்புவைச் சேர்ந்த மற்றொரு மலையேற்ற வீரர் பசாங் தாவா ஷெர்பா, கடந்த ஆண்டு 27வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். ஆனால் இந்த பருவத்தில் அவர் மீண்டும் ஏற முயற்சி செய்வாரா என்று நிச்சயமற்றதாகவே உள்ளது.