வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய சக்திவாய்ந்த சூரியப் புயல்; பவர் கிரிட்கள் செயலிழக்க வாய்ப்பு!

Published : May 11, 2024, 09:37 AM IST

20 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் வெள்ளிக்கிழமை பூமியைத் தாக்கியுள்ளது.  இதானல்,  பவர் கிரிட்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

PREV
16
வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய சக்திவாய்ந்த சூரியப் புயல்; பவர் கிரிட்கள் செயலிழக்க வாய்ப்பு!
Solar Storm, Power Grids, geomagnetic storm, Halloween Storms, NOAA, Solar Storm auroras

20 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் வெள்ளிக்கிழமை பூமியைத் தாக்கியுள்ளது.  இதானல், உலகின் பல நாடுகளில் வானத்தில் கண்கவர் வர்ணஜாலக் காட்சிகள் தோன்றின. ஆனால், இந்தச் சூரியப் புயலால் செயற்கைக்கோள்கள் மற்றும் பவர் கிரிட்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

26
Solar Storm, Power Grids, geomagnetic storm, Halloween Storms, NOAA, Solar Storm auroras

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின்படி, கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CMEs) எனப்படும் சூரியன் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களை வெளியேற்றும் நிகழ்வு, தீவிர புவி காந்த புயலாக மாறியுள்ளது.

36
Solar Storm, Power Grids, geomagnetic storm, Halloween Storms, NOAA, Solar Storm auroras

இதற்கு முன் அக்டோபர் 2003ஆம் ஆண்டு இதேபோல சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கியது. "ஹாலோவீன் புயல்கள்" என்று அழைக்கப்பட்ட அந்தச் சூரியப்புயலின் தாக்கத்தால் ஸ்வீடனில் மின்தடை ஏற்பட்டது. தென்னாப்பிரிக்காவில் பவர் கிரிட்டுகள் சேதம் அடைந்தன.

46
Solar Storm, Power Grids, geomagnetic storm, Halloween Storms, NOAA, Solar Storm auroras

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சூரியப் புயலைத் தொடந்து, வரவிருக்கும் நாட்களில் மேலும் சூரியப் புயல்கள் பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் NOAA கூறியுள்ள்ளது.

56
Solar Storm, Power Grids, geomagnetic storm, Halloween Storms, NOAA, Solar Storm auroras

இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து சூரியப் புயல் பூமியைத் தாக்கியபோது வானில் தோன்றிய விண்ணமயமான காட்சிகளை பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

66
Solar Storm, Power Grids, geomagnetic storm, Halloween Storms, NOAA, Solar Storm auroras

சூரியப்புயலால் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பவர் கிரிட்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories