100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அபூர்வ சந்திர கிரகணம்! எங்கே, எப்போது பார்க்கலாம்?

First Published | Mar 25, 2024, 12:31 AM IST

2024ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று வானில் நிகழவுள்ளது. பங்குனி உத்திரத்தில் வரும் இந்தச் சந்திர கிரகணம் நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு ஆகும்.

Lunar Eclipse 2024 on March 25

2024ஆம் ஆண்டு சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) நிகழ்கிறது. நாளை தமிழ் மாதமான பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்தச் சந்திர கிரகணம் விசேஷமானது.

Lunar Eclipse 2024 Predictions

பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி நாளை ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

Tap to resize

Lunar Eclipse 2024 horoscope

இதனால் இன்று (மார்ச் 25ஆம் தேதி) வானில் தோன்றும் சந்திர கிரகணம் வழக்கமான சந்திர கிரகண நிகழ்வை விட கூடுதல் சிறப்பு வாய்ந்தது எனக் கருதப்படுகிறது.

Lunar Eclipse 2024 Visibility

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.  

Lunar Eclipse 2024 Timing

இன்றைய சந்திர கிரகணம் 2024ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஆகும். இந்த சந்திர கிரகண நிகழ்வு காலை 10:23 மணிக்குத் தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடியும்.

Latest Videos

click me!