அடேங்கப்பா... சொர்க்கத்தையே கப்பலில் இறக்கிட்டாங்க! முதல் பயணத்தைத் தொடங்கிய பிரம்மாண்ட கப்பல்!

First Published | Jan 27, 2024, 6:45 PM IST

Icon of the Seas கப்பலின் முதல் பயணம் அமெரிக்காவின் மியாமி நகரில் தொடங்கி உள்ளது. 'மிதக்கும் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான கப்பலின் மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

Icon of The Seas

ராயல் கரீபியன் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிகப்பெரிய கப்பலான ஐகான் ஆஃப் தி ஸீஸ் (Icon of the Seas) முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது. அதிநவீன வசதிகளைக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான கப்பல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Icon of The Seas

1,200 அடி நீளமும் 2.5 லட்சம் டன் எடையும் கொண்ட Icon of the Seas கப்பலில் 7600 பேர் பயணிக்க முடியும். 2,350 ஊழியர்களும் இதில் இருப்பார்கள். 28 அறைகளுடன் மூன்று மாடிகள் கொண்ட டவுன் ஹவுஸ் இந்தக் கப்பலில் இருக்கிறது.

Latest Videos


Icon of The Seas

மூன்று மாடிகளில் அனைத்து விதமான ஷாப்பிங் வசதிகள் இருக்கின்றன. சென்ட்ரல் பார்க், பியர்ல் என்ற கண்ணை கவரும் அரங்குகள் உள்ளன. கப்பலின் மேற்பகுதியில் த்ரில் ஐலேண்ட் (Thrill Island) என்ற வாட்டர் பார்க்க் இருக்கிறது.

Icon of The Seas

Icon of the Seas கப்பலைத் தயாரித்துள்ள ராயல் கரீபியன் நிறுவனத்தின் தலைவர் ஜேசன் லிபெர்ட்டி, இது உலகின் மிகப்பெரிய கப்பல் என்று கூறியுள்ளார். இந்தக் கப்பலை இயக்க எல்.என்.ஜி. மீத்தேன் என்ற திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Icon of The Seas

இந்தக் கப்பலின் முதல் பயணம் அமெரிக்காவின் மியாமி நகரில் தொடங்கி உள்ளது. 'மிதக்கும் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான கப்பலின் மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

Icon of The Seas

இந்த கப்பலின் விளம்பர தூதராக அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இருக்கிறார். கப்பில் அறிமுகமான உடனேயே இதற்கான புக்கிங் வேகமாக நடைபெற்றுள்ளது. இதனால், 2026ஆம் ஆண்டு வரை இந்தக் கப்பலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாம்.

Icon of The Seas

இந்த மிதக்கும் சொர்க்கத்தில் பயணிக்க ஏழு நாட்களுக்கு 1,800 டாலர் முதல் 2,200 டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ரூ.1,50,000 முதல் ரூ.1,83,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

click me!