கிறிஸ்துமஸை முன்னிட்டு அரை நிர்வாண ஓட்டம்! ஹங்கேரியின் வித்தியாசமான கொண்டாட்டம் ஏன் தெரியுமா?

First Published | Dec 11, 2023, 3:11 PM IST

ஹங்கேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையைய முன்னிட்டு புடாபெஸ்ட் ரன் எனப்படும் அரை-நிர்வாண சாண்டா ஓட்டம் நடைபெற்றது.

ஹங்கேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையைய முன்னிட்டு புடாபெஸ்ட் ரன் எனப்படும் அரை-நிர்வாண சாண்டா ஓட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு அரைநிர்வாணமாக ஓடினர்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் இந்த அரை நிர்வாண சாண்டா ஓட்டம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் இந்த ஆண்டு பங்கேற்பாளர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை Tiny Ray of Hope என்ற ஹங்கேரிய அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.

Latest Videos


இந்தத் தொகையை அந்த அறக்கட்டளை கடுமையான உடற்குறைபாடுகள் கொண்ட குறைமாத குழந்தைகளை வளர்க்கும் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தாத்தா போல தொப்பி அணிந்திருந்த பங்கேற்பாளர்கள் 'ஹோ-ஹோ' என்று கத்தி ஆரவாரம் செய்துகொண்டு ஓடினர். மேலாடை இல்லாமல் ஓடியவர்கள் ஆங்காங்கே உடற்பயிற்சி செய்தபடியும் நடனம் ஆடியபடியும் சென்றனர். உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் அவர்களை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

புடாபெஸ்ட் ரன் நிகழ்ச்சியின் நிறுவனர் அமெரிக்காவின் பாஸ்டனில் இதேபோன்ற ஓட்டத்தைப் பார்த்த பிறகு, அதே போன்ற நிகழ்ச்சியை புடாபெஸ்ட் நகரிலும் நடத்த முடிவு செய்ததாகக் கூறுகிறார்.

click me!