100 வயதில் காலமான ஹென்றி கிஸ்ஸிங்கர்! இந்தியர்கள் பற்றி சொன்ன 'அந்த' வார்த்தை என்ன தெரியுமா?

First Published | Nov 30, 2023, 11:10 PM IST

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கொள்கையில் பல முக்கிய முடிவுகளை எடுத்த வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது நூறாவது வயதில் காலமானார்.

Henry Kissinger

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கொள்கையில் பல முக்கிய முடிவுகளை எடுத்த வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது நூறாவது வயதில் காலமானார். ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது நூறாண்டு வாழ்க்கையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராக இருந்துள்ளார்.

Henry Kissinger

ரிச்சர்டு நிக்சன், ஜெரால்டு போர்டு ஆகியோர் அமெரிக்க அதிபர்களாக இருந்தோபது, 1969-75 காலகட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் ஹென்றி கிஸ்ஸிங்கர் பணியாற்றியுள்ளார்.ஜெர்மனியில் ஃபர்த் பகுதியில் 1923ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பிறந்த ஹென்றி கிஸ்ஸிங்கர், 1943ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Henry Kissinger

வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தியவர் ஹென்றி கிஸ்ஸிங்கர். இதற்காக 1973ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கிழக்கு திமோர் படையெடுப்பில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ராணுவ சர்வாதிகாரியை ஆதரித்தார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறி காரணமாக அங்கோலா படையெடுப்பு நிகழ்ந்தபோது அதற்கு ஆதரவாக இருந்துள்ளார்.

Henry Kissinger

1971 இந்தியா-பாகிஸ்தான் போரில், நிக்சன் மற்றும் கிஸ்ஸிங்கர் இருவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக, கிஸ்ஸிங்கர் அப்போது இந்தியர்களை "Bastards" என்று வசைபாடினார். பின்னர் தனது தரக்குறைவான பேச்சுக்காக வருந்துவதாகக் கூறினார்

Henry Kissinger

சிலி நாட்டில் தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை பதவிநீக்கம் செய்ய புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து பணியாற்றி, பெரும் சர்ச்சையில் சிக்கினார். முதுமை காரணமாக, அமெரிக்காவின் கனெக்டிக்கட் நகரில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை மாலை காலமானார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!