விராட் கோலி பேட் பரிசாக வழங்கி... இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் ஜெய்சங்கர்

First Published | Nov 13, 2023, 9:43 AM IST

தீபாவளியன்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவருக்கு விராட் கோலியின் பேட்டை பரிசாக வழங்கினார்.

rishi sunak, Jaishankar

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் உடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி உள்ளார் ஜெய்சங்கர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் தற்போது பிரிட்டன் பிரதமராக உள்ளார். அவருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீபாவளி கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

rishi sunak with virat kohli bat

அப்போது ரிஷி சுனக்கும் அவரது மனைவியும் ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி பிரதமர் மோடியும் தொலைபேசி வாயிலாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை அழைத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது ரிஷி சுனக்கிற்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos


Jai shankar gifted bat to rishi sunak

அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பரிசாக வழங்கி இருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். நவம்பர் 15-ந் தேதி வரை அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர். இந்த சுற்றுப்பயணத்தின் போது இருநாடுகளின் இடையே உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.

rishi sunak, jaishankar family

ரிஷி சுனக்கை சந்திக்கும் முன்னர் லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர் கோவிலில் தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் அமைச்சர் ஜெய்சங்கர். அப்போது உலகமெங்கும் அமைதி நிலவ வேண்டி பிரார்த்தனை செய்துகொண்டதாக ஜெய்சங்கர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதேபோல் அங்கு வந்திருந்த இந்தியர்களுடன் அவர் கலந்துரையாடினார். 

இதையும் படியுங்கள்... டெல்லியில் குவிந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்.. களத்தில் குதித்த ஜெய்சங்கர்.. உலகமே எதிர்பாராத ட்விஸ்ட்

click me!