ஷாக் கொடுத்த ஷெரிகா... 26 வயதில் மரணம்... உலக அழகி போட்டியில் கலக்கியவருக்கு இப்படி ஒரு வியாதியா!

First Published | Oct 16, 2023, 2:03 PM IST

ஷெரிகா டி அர்மாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நன்மைக்காக சேவை செய்வதில் அதிக கவனம் செலுத்தினார்.

Miss World Contestant Sherika De Armas

முன்னாள் உலக அழகி போட்டியாளர் ஷெரிகா டி அர்மாஸ், அக்டோபர் 13ஆம் தேதி தனது 26 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை எடுத்துவந்த ஷெரிகா டி அர்மாஸ், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிருக்குப் போராடி இறுதியில் மரணத்தைத் தழுவியுள்ளார். அவரது மரணம் உருகுவே மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Sherika De Armas Dies At 26

ஷெரிகா டி அர்மாஸ் 2015ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்துகொண்டார். ஆனால், அவரால் முதல் 30 இடங்களுக்குள் வரமுடியவில்லை. இருப்பினும், அந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான ஆறு அழகிகளில் ஒருவராக இருந்தார்.

அந்த நேரத்தில் ஊடக நிறுவடம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷெரிகா, "எனக்கு எப்போதும் மாடலாக இருக்கவே ஆசை. பியூட்டி மாடலாகவோ, விளம்பர மாடலாகவோ, கேட்வாக் மாடலாகவோ இரகுக விரும்புகிறேன். ஃபேஷன் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்குப் பிடிக்கும், அழகுப் போட்டியில் எந்தப் பெண்ணின் கனவும் மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க வேண்டும் என்பதுதான். சவால்கள் நிறைந்த இந்த அனுபவம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்று தெரிவித்தார்.

Tap to resize

Sherika De Armas

ஷெரிகா தலைமுடி பராமரிப்பு தொடர்பான பொருட்களையும் விற்பனை செய்யும் ஷே டி அர்மாஸ் ஸ்டுடியோ எனப்படும் நிறுவனத்தை நடத்தினார். கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் பெரெஸ் ஸ்க்ரிமினி அறக்கட்டளையுடன் இணைந்து சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்து வந்தார்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெண்களுக்கு ஏற்பாடும் நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். "2018ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 570,000 பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 311,000 பெண்கள் இந்த நோயால் இறந்துள்ளனர்" என உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos

click me!