இந்த 4 நாடுகளும் உங்களுக்கு பணம் கொடுக்கும்: உடனே டிக்கெட் புக் பண்ணுங்க!

First Published | Oct 5, 2023, 2:44 PM IST

வெளிநாடுகளுக்கு செல்ல விசா மறுக்கும் நாடுகளுக்கு மத்தியில், உங்களை மனமுவந்து அழைப்பதுடன், அதற்காக பணமும் செலுத்தும் சில நாடுகள் உள்ளன

நம்மில் பலரும் வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், விசா கிடைக்காதது. போதிய பணம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்கு நாம் செல்வதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால், உங்களை மனமுவந்து அழைப்பதுடன், அதற்காக பணமும் செலுத்தும் சில நாடுகள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அதுபோன்ற சில நாடுகள் உள்ளன. அதற்கு சில விதிமுறைகளும் இருக்கின்றன. அத்தகைய நாடுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சர்டினியா, இத்தாலி


இத்தாலியின் சர்டினியாவில் உள்ள ஒலோலாய் என்ற கிராமம். தொலைதூர தொழிலாளர்களை கவரும் வகையில், வேலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் வாடகை செலுத்தாமல் ஒலோலாயில் வசிக்கலாம். வாடகையே இல்லை என்று அர்த்தமில்லை. மொத்த  வாடகையே ஒரு யூரோ தான். அதற்கு பதிலாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நமது பணி அனுபவம் போன்றவற்றை அங்குள்ள பூர்வீக மக்களிடம் பகிர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

உலகத்துடன் தொடர்பு கொள்ளவும், கலாச்சார அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், அங்குள்ள மாணவர்களையும் மற்ற மக்களையும் டிஜிட்டல் உலகை பற்றி நன்கு அறிந்தவர்களாக மாற்ற உதவ வேண்டும்.

Tap to resize

சார்க், பெய்லிவிக் ஆஃப் குர்ன்சி (பிரிட்டன்)


சார்க் என்பது இங்கிலாந்தின் குர்ன்சியின் பெய்லிவிக் பகுதியில் உள்ள ஒரு தீவு. இந்த தீவுக்கு செல்ல விரும்புவோருக்கு உதவும் வகையில் 'சார்க் சொசைட்டி புரோகிராம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு 16 லட்சம் ரூபாய்க்கும் மேல் தொகையும், ஓராண்டு விசாவும் தருவதாக உறுதியளிக்கின்றனர்.

ஆஸ்திரியா


ஆஸ்திரிய அரசாங்கம் சிவப்பு-வெள்ளை-சிவப்பு அட்டை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்நாட்டிற்குச் சென்று அங்கு வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.5.24 லட்சம் வழங்குவதுடன், ஓராண்டு விசாவும் வழங்குகின்றனர்.

மொரிஷியஸ்


மொரிஷியஸ் நாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்கு நீங்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தை உங்கள் ஸ்டார்ட்அப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதில் தேர்வானால், 37,000 ரூபாய் அலவன்ஸாக கொடுக்கப்படுகிறது. இது சிறிய தொகையாக தோன்றலாம். ஆனால், மொரிஷியஸ் நாடு மலிவானது என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!