கூகுள் முதல் வாட்சப் வரை.. மக்கள் அதிகம் பார்வையிட்ட டாப் 10 இணையதளங்கள் என்னென்ன? அதிகாரப்பூர்வ ரிப்போர்ட்!
Ansgar R |
Published : Nov 06, 2023, 12:35 PM IST
Most Visited Websites : இந்த டிஜிட்டல் உலகில், நம் கையில் தான் இந்த உலகமே உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. மேலும் நாம் அதை நம் கையில் வைத்திருக்க தினம்தோறும் பல இணையதளங்கள் நமக்கு உதவியாக இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பிரபல நிறுவனம் ஒன்று உலக அளவில் அதிக மக்களால் பார்வையிடப்பட்ட இணையதளங்களை பட்டியலிட்டுள்ளது, அந்த பட்டியலை இப்பொது காணலாம்..
Google
ஏலியன்கள் எப்படி இருப்பார்கள்..? உலகின் ஆழமான இடம் எது..? இப்படி என்ன கேள்வி நாம் கேட்டாலும் அதற்கு பதில் தரும் ஒரு இணையதளம் தான் கூகுள். பலரும் தங்களுக்கு தேவையான தகவல்களை தேடும் ஒரு இடமாக உள்ளது கூகுள். அந்த கூகுள் தான் மக்கள் அதிக பார்வையிட்ட இணையதளம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் பாடல்களை கேட்க வேண்டுமா? அல்லது நீங்களே வீடியோ உருவாக்கி பெரும் தொகை சம்பாரிக்க வேண்டுமா? அனைத்தும் முடியும் YouTube இருந்தால். என்று சொல்லும் அளவிற்கு இன்று YouTubeஐ பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தை மேன்படுத்திக்கொள்ளும் மனிதர்கள் அதிகம். அந்த வகையில் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது YouTube.
35
Facebook
Facebook
மனதில் தோன்றியதை பேச, மற்றும் நமது நண்பர்களுடன் இணைத்திற்க, இன்றைய தலைமுறையிடம் பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு விஷயம் தான் முகநூல். பழைய இணையதளம் என்றாலும், இன்றளவும் மக்கள் அதிகம் பார்வையிடும் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது இது.
45
Instagram
Instagram
கடந்த 2010ம் ஆண்டு ஒரு புகைப்பட பகிர்வு தளமாக தொடங்கப்பட்டது, ஆனால் Instagram கடந்த 10 ஆண்டுகளில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக ரீலிஸ் தான் உலகம் என்று மாறிவிட்ட நிலையில், மக்கள் அதிக பார்க்கும் இணையதளங்களில் இது இப்பொது நான்காம் இடத்தில் உள்ளது.
எலோன் மஸ்க் கையகப்படுத்திய பிறகு, கவனத்தை ஈர்ப்பதில் தவறவே தவறாத ஒரு செயலியாக மாறியுள்ளது X என்றால் அது மிகையல்ல. பிரபலங்கள் பெரிய அளவில் பயன்படுத்தும் ஒரு தளமான இது, உலக அளவில் 5ம் இடத்தில் உள்ளது.
மேலும் இந்த பட்டியலில் 6ம் இடத்தில் baidu.com 7ம் இடத்தில் wikipedia, 8ம் இடத்தில் yahoo.com, 9ம் இடத்தில் Yandex.ru மற்றும் 10ம் இடத்தில் whatsapp ஆகியவை உள்ளது.