புளூடூத் கேஜெட்ஸ் நிறைய யூஸ் பண்ணுறீங்களா? அப்ப ஹேக்கர்களின் டாக்கெட் நீங்கதான்!

First Published | May 19, 2024, 5:53 PM IST

வயர்லெஸ் முறையில் எலெக்ட்ரானிக் சாதனங்களை இணைப்பதில் புளூடூத் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், வாய்ஸ் அசிஸ்டெண்ட் என புளூடூத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல சாதனங்களில் உள்ளது. ஆனால், இந்த புளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று தெரியுமா?

Bluejacking

புளூஜாக்கிங் என்பது ஒருவகை சைபர் தாக்குதல். அங்கீகரிக்கப்படாத நபர்கள் புளூடூத் சாதனங்களுக்கு மேசேஜ் அல்லது ஃபைல்களை அனுப்புவது புளூஜாக்கிங் எனப்படுகிறது.

BlueSnarfing

புளூடூத் டிவைஸ்களில் இருந்து தொடர்பு எண்கள், மெசேஜ், மல்டிமீடியா ஃபைல்ஸ் போன்றவற்றை திருட்டுவதை புளூஸ்னர்ஃபிங் என்று சொல்கிறார்கள். புளூடூத்தில் உள்ள பாதிப்புகளைப் பயன்படுத்தி தரவுகளைத் திருடுகிறார்கள்.

Latest Videos


Bluebugging

புளூபக்கிங் என்பது ஒரு அதிநவீன தாக்குதலாகும். இந்த வழியில் ஹேக்கர்கள் புளூடூத் சாதனத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறார்கள். உண்மையான பயனரின் அனுமதியின்றி போன் கால் செய்வது, மெசேஜ் அனுப்புவது, தரவுகளைப் பகிர்வது போன்ற மீறல்களில் ஈடுபடுவார்கள்.

Denial of Service (DoS)

தீங்கிழைக்கும் தரவுகளை அதிகமாக அனுப்பி புளூடூத் சாதனங்களின் ஸ்டோரேஜ் நிரப்பி வழியை வைப்பது DoS தாக்குதல் எனப்படுகிறது. இதன் மூலம் அந்த புளூடூத் சாதனத்தையே பயன்படுத்த முடியாததாக ஆக்கிவிடுவார்கள்.

Eavesdropping

புளூடூத் சிக்னல்கள் வரையறுக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளன. சில சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி, புளூடூத் மூலம் பேசும் போன் கால்களை தொலைவிலிருந்தே ஒட்டுக்கேட்க முடியும். இதனால் அந்தரங்கமான தகவல்கள் கசியும் அபாயம் உள்ளது.

MITM Attacks

எம்.ஐ.டி.எம். (MITM) எனப்படும் மேன்-இன்-தி-மிடில் தாக்குதல்களில், ஹேக்கர்கள் இரண்டு புளூடூத் சாதனங்களுக்கிடையே நடக்கும் தகவல்தொடர்பை இடைமறித்து, பரிமாறப்படும் தரவுகளைத் திருடுகிறார்கள். இதுவும் ரகசியத் தகவல்கள் கசியும் சூழலை உருவாக்குகிறது.

Blueborne Vulnerability

புளூபோர்ன் என்பது உலகளவில் பில்லியன் கணக்கான புளூடூத் சாதனங்களைப் பாதிக்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பு அச்சுறுத்தல். தாக்குதலுக்கு இலக்காகும் புளூடூத் சாதனத்தை தொலைவிலிருந்து இயக்கவும், அந்த சாதனத்தின் உரிமையாளருக்குத் தெரியாமல் தீங்கிழைக்கும் தரவுகளைப் பரப்பவும் முயல்கிறார்கள்.

Weak Encryption

சில புளூடூத் சாதனங்கள் பலவீனமான பின் கோடுகளைக் கொண்டிருந்தால் அவை மோசமான தாக்குதல்களுக்கு ஆளாகின்றன. ஹேக்கர்கள் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு கொண்ட புளூடூத் சாதனங்களை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.

Bluetooth Low Energy (BLE) Exploits

BLE தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்டார்ட் வாட்ச், இயர்போன் போன்ற சாதனங்கள் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகின்றன. திருட்டுத்தனமாக தரவுகளைக் கையாளுவது போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு வாய்ப்பு உள்ளது.

Unpatched Vulnerabilities

மற்ற தொழில்நுட்பங்களைப் போலவே, புளூடூத் தொழில்நுட்பத்திலும் சாஃப்ட்வேர் அப்டேட் மிகவும் முக்கியமானது. அப்டேட்களை உடனடியாக நிறுவாமல் இருக்கும்போது சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்படலாம்.

click me!