Kanguva : திடீரென வந்த டீசர் அப்டேட்... கங்குவா படக்குழுவின் சைலண்ட் சம்பவத்தால் திக்குமுக்காடி போன ரசிகர்கள்

First Published Mar 18, 2024, 10:21 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Kanguva

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்க, இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Kanguva suriya

கங்குவா வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் சூர்யா. கங்குவா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட மொத்தம் 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Sheetal : எங்களுக்குள்ள அது நடக்கவே இல்ல... பப்லு உடனான உறவை பாதியில் முறித்துக்கொண்டது ஏன்? ஷீத்தல் விளக்கம்

Kanguva update

கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பின்னர் அப்படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிடாமல் படக்குழு தாமதம் செய்து வந்தது. இதனால் ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக அடிக்கடி கங்குவா அப்டேட் கேட்டு வந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

kanguva Teaser Release Date

அதன்படி கங்குவா படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி கங்குவா பட டீசர் மார்ச் 19-ந் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த டீசரில் கங்குவா படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் அடங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... KPY Bala : சைக்கிள் கூட இல்லாம கஷ்டப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்.. பைக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலா

click me!