காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்... உருகி உருகி காதலித்த பெண்ணை கரம்பிடித்தார் சன் டிவி சீரியல் ஹீரோ

First Published Apr 18, 2024, 1:48 PM IST

சன் டிவி சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் விராட் தன்னுடைய நீண்ட நாள் காதலியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

viraat - Naveena

சன் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்பே வா. இந்த சீரியலில் ஹீரோவாக விராட்டும், ஹீரோயினாக டெல்னா டேவிஸும் நடித்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் அண்மையில் படமாக்கப்பட்டது.

viraat lover Naveena

சீரியல் முடிந்த கையோடு அந்த தொடரின் நாயகன் விராட்டுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவர் நவீனா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விராட் - நவீனா ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... AR Rahman : ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்... மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாட வாங்க - ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு

viraat - Naveena Marriage

விராட்டும், நவீனாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். குடும்பத்தினரின் கிரீன் சிக்னலுக்காக காத்திருந்த இந்த ஜோடி, தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. விராட்டுக்கு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக அவருக்கு ரசிகைகள் அதிகம் என்றே சொல்லலாம்.

viraat - Naveena Wedding

விராட்டின் மனைவி நவீனா மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். அவர் பல்வேறு பிரபலங்களுக்கு சிகை அலங்காரம் செய்துள்ளார். அப்படி தான் அவருக்கும் விராட்டுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி தற்போது இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். நவீனா - விராட் ஜோடியின் காதல் திருமணம் தான் சின்னத்திர வட்டாரத்தில் இன்று ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Celebrities Voting Place: நாளை ரஜினி, விஜய், அஜித், த்ரிஷா போன்ற பிரபலங்கள் எங்கு ஓட்டு போட உள்ளனர் தெரியுமா?

click me!