மருமகனை கொன்று கிணற்றில் வீசிய மாமியார்; 8 மாதங்கள் நாடகமாடிய குடும்பம் - திருப்பூரில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published May 18, 2024, 7:22 PM IST

திருப்பூரில் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை மாமியாரே கொலை செய்துவிட்டு 8 மாதங்களாக குடும்பத்தோடு நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வடிவேல் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வடிவேலை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

இதனை தொடர்ந்து இன்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன வடிவேலுவின் சடலம் தான் என அடையாளங்களைக் கொண்டு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த வடிவேலின் உடலை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

தொடர் மழை எதிரொலி; மதுரை அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு 

இது தொடர்பாக வடிவேலின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும்  தகவல்கள் வெளியாகி பொதுமக்கள் மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது பழக்கத்திற்கு அடிமையான வடிவேல் அடிக்கடி குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனை அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த  வடிவேலின் மாமியார் மரியா தனது கள்ளக்காதலனான பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் கோவில்பாளையத்தில் உள்ள வடிவேலின் மாமனார் தேவராஜ் வீட்டில் வைத்து வடிவேலை தாக்கி கொலை செய்துள்ளனர். 

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை; தனது கல்வியால் வீட்டிற்கே வெளிச்சம் கொடுத்த அரசுப்பள்ளி மாணவி

பின்னர் சாலை ஓரத்தில் உள்ள கிணற்றில் வீசிச்சென்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று உடனிருந்த வடிவேலின் மனைவி திவ்யா, மாமியார் மரியா, மாமனார் தேவராஜ், மரியாவின் கள்ளக்காதலன் பாலாஜி, பாலாஜியின் கூட்டாளிகளான சோனை முத்து, பொன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே மது போதையில் அடிக்கடி தகராறு செய்த மருமகனை மாமியாரே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

click me!