AR Rahman : ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்... மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாட வாங்க - ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள விழிப்புணர்வு பதிவு வைரலாகி வருகிறது.
18வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கான முடிவுகள் வருகிற ஜூன் 4-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன,
தேர்தல் நாளை நடைபெற உள்ளதால் அதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தற்போது வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது ஜூன் 4-ந் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படியுங்கள்... காதலி பெயரில் வெளிவந்த TR-ன் முதல் படம்... நடிக்க மறுத்த ரஜினி; ஹீரோவாக களமிறங்கி ஹிட் கொடுத்த டி.ராஜேந்தர்
தேர்தலுக்கான விழிப்புணர்வும் ஒருபுறம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை இளம் வாக்காளர்கள் அதிகளவில் இருப்பதால் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. அந்த வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் தன் பங்கிற்கு ஓட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அந்த பதிவில், வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கியமான கடமை. 2024-ல் நடைபெறும் இந்த மக்களவை தேர்தலில் வாக்களிக்க அதிகளவிலான இளைஞர்கள் தகுதி பெற்றுள்ளனர். அனைத்து மக்களையும், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்து மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை உலகம் வியக்க பார்க்க செய்வோம் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Yuvan : இன்ஸ்டாகிராமை டெலீட் செய்த யுவன் சங்கர் ராஜா.. விஜயின் ரசிகர்கள் தான் காரணமா? என்ன நடந்தது?