2BH வீடா...? ஒரு ஏசி போதும் வீடு முழுவதும் குழு குளுனுதான் இருக்கும்...எப்படி..?

First Published Apr 12, 2024, 11:36 AM IST

இந்த கோடையில் உங்கள் வீடு குளிர்ச்சியாக இருக்க சென்ட்ரல் ஏசியை வையுங்கள். விலை மிகவும் மலிவானது தான்.

நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் ஃபேன், கூலர் மற்றும் ஏசி இல்லாமல் இருக்க முடியாது.. அதிலும் குறிப்பாக, பலர் ஏசி தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இவற்றில் பல வகைகளும் உள்ளன.

ஆனால், உங்களுக்கு தெரியுமா.. வீட்டில் வெப்பம், பட்ஜெட் மற்றும் இடம் ஆகிய மூன்று காரணிகளைக் கருத்தில் கொண்டு, 'சென்ட்ரல் ஏசி' தான் மிகவும் நல்லது. அதில் பலவிதமான நன்மைகள் உள்ளன. அவற்றை குறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

நீங்கள் ஒன்று அல்லது 2 BHK குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், கோடையில் உங்களுக்கு ஏசி தேவைப்படலாம். நீங்கள் உங்கள் வீட்டில் ஏசியை வைக்க விரும்பினால் சென்ட்ரல் ஏசி நிச்சயமாக உங்கள் தேவையை பூர்த்தி செய்யும். இதனால் வீடு முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும்.

மேலும் உங்களது 2 BHK குடியிருப்பில் ஸ்பிளிட் அல்லது ஜன்னல் ஏசிக்கு பதிலாக சென்ட்ரல் ஏர் கண்டிஷனரை வைத்தால், அதற்கு ரூ.40,000 முதல் 45,000 வரை செலவாகும். ஏனெனில் அதில் ஒரு யூனிட் ஏசி மட்டுமே நிறுவப்பட்டுள்ளது.

இதனால் உங்கள் வீடு முழுவதும் குளிர்ச்சி நிறைந்து இருக்கும். மேலும், நீங்கள் வீட்டின் எல்லா அறையிலும் ஏசியை வைக்க விரும்பவில்லை என்றால், சென்ட்ரல் ஏசியே சிறந்த வழி. காரணம் இந்த ஏசி நீங்கள் எதிர் பார்த்ததைவிட நல்ல வேலை செய்யும்.

click me!