Eggs In Summer : கோடையில் முட்டை சாப்பிடலாமா.. அது நல்லதா..? மீறினால் என்ன நடக்கும்..??

First Published Apr 16, 2024, 7:00 AM IST

கோடையில் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா? என்ற கேள்வி பலருக்கு வரும். அதற்கான பதில் இதோ.

கோடையில் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா? என்ற கேள்வி பலருக்கு அடிக்கடி வரும். காரணம், முட்டை வெப்ப குணம் கொண்டது. சரி வாங்க இப்போது இந்த கேள்விக்கான பதிலை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

கோடையில் முட்டையை சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள்: கோடையில் முட்டையை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதன் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

வயிற்று சூட்டை அதிகரிக்கும்: கோடையில் முட்டை சாப்பிட்டால், அது வயிற்று சூட்டை அதிகரிக்கும். காரணம், முட்டை வெப்ப குணம் உடையது. மேலும் நீங்கள் இதை கோடையில் அதிகமாக சாப்பிட்டால் முகத்தில் பருக்கள் வரும். அதுமட்டுமின்றி, அசிடிட்டி மற்றும் எரியும் உணர்வையும் ஏற்படுத்தும்.

செரிமான பிரச்சனை: கோடையில் முட்டையை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, வயிற்றுவலி, அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் கூட வரும்.

இதையும் படிங்க:  கெட்டுப்போன முட்டையை சுலபமான முறையில் கண்டறியும் வழிகள் இதோ..!!

சிறுநீரக பிரச்சினை: கோடையில் முட்டையை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியத்தில் மோசமான விளைவு உண்டாகும். எனவே, அதை அளவோடு சாப்பிடுங்கள். அதுதான் நல்லது.

இதையும் படிங்க: Health Tips : நீங்கள் ஒரு மாதம் முட்டை சாப்பிடவில்லை எனில் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்: பொதுவாகவே, முட்டையில் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், இதை நீங்கள் கோடையில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மட்டுமின்றி, மாரடைப்பு அபாயத்தையும் ஏற்படுத்தும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!