சவுக்கு சங்கர் தனது பினாமி பெயரில் அவர் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் பிரபல யூடியூபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்
பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா, பணம் ஆகியவற்றை வை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பேரில், சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக சிஎம்டிஏ அதிகாரிகள் கொடுத்த புகாரிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் மொத்தம் 7 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது. இதே போல் அவரின் பேட்டிகளை ஒளிபரப்பு செய்த யூ டியூப் சேனலின் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்..
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தனது பினாமி பெயரில் அவர் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் பிரபல யூடியூபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியிட்டு பேசிய அவர் “ செய்திவாசிப்பாளராக இருந்த மாலதி தற்போது யூ டியூப் சேனலில் பேட்டியெடுத்து வருகிறார். இவர் தான் சவுக்கு சங்கரின் பினாமியா என்ற கேள்வி எழுந்துள்ளது. சவுக்கு சங்கர் மாலதியை பினாமியாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சேர்ப்பதாக அவரின் மனைவி நிலவு மொழி தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கரின் மனைவி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். வெறும் 14,000 ரூபாய் வாடகை வீட்டில் வசித்து வந்த மாலதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தி.நகரில் 3.5 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கினார். மாலதி பெயரில் பதிவான பத்திர ஆவணங்கள் இருக்கிறது.” என்று மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் “ மாலதி வாங்கிய நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.3 கோடியாகும். மாலதி பெயரில் ரூ.3 கோடி கொடுத்து சவுக்கு சங்கர் வாங்கி இருக்க வேண்டும். அதில் 2 கோடியை கருப்பு பணமாக அவர் மறைத்து வைத்திருக்கிறார். அதனால் ரூ.1 கோடிக்கு அந்த வீட்டை வாங்கியதாக கணக்கு காட்டி ஏமாற்றி உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் சவுக்கு சங்கருக்கு ரூ.5 கோடி கருப்பு பணம் வந்துள்ளது. சவுக்கு சங்கர் யாருடைய கருப்பு பணத்தில் வேலை பார்க்கிறார். மாலதிக்கு போன கருப்பு பணம் எவ்வளவு? மாலதிக்கு மட்டும் தான் கருப்பு பணம் போனதா? அல்லது வேறு யாருக்காவது கருப்பு பணம் சென்றதா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.
ரூ.5 கோடி வரை கருப்பு பணத்தை சவுக்கு சங்கர் மறைத்துள்ளார். இவரும் யாருக்கோ பினாமியாக இருக்கிறார். தனக்கும் இவர் பினாமிகளை உருவாக்குகிறார். அமலாக்கத்துறை இவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.