Railways White Bedsheets
இந்தியாவில் தொலைதூரப் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ரயிலில் தான் செல்கிறார்கள். ஸ்லீப்பர் கோச்சில் நீண்ட தூர பயணத்தின்போது பயணிகளுக்கு பெட்ஷீட்கள், தலையணைகள் போன்றவை ரயில்வே சார்பில் வழங்கப்படும்.
White Bedsheet in Trains
இந்த பெட்ஷீட் மற்றும் தலையணைகள் ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் புதியதாக வழங்கப்படும். அவை எப்போதும் வெள்ளை நிறத்தில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அது ஏன் என்று தெரியுமா?
Railway Bedsheets in Sleeper Class
ரயில்வே பெட்ஷீர் மற்றும் தலையணைகளை வெள்ளை நிறத்தில் தருவதற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. இந்திய ரயில்வே தினசரி ஏராளமான ரயில்களை இயக்குகிறது. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பெட்ஷீட்கள் மற்றும் தலையணைகள் பயன்படுத்தப்படுகின்றன.
White Bedsheets and pillows
ஒரு முறை பயன்படுத்திய பிறகு அவை சுத்தம் செய்வதற்காகச் சேகரிக்கப்படுகின்றன. 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராவி கொதிகலன்களில் இந்த பெட்ஷீட்கள் துவைக்கப்படுகின்றன. 30 நிமிடங்கள் இந்த நீராவியில் வைத்து கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.
White Bedsheets in Indian Railways
இந்த முறையில் நீராவி கொண்டு வெளுக்கும் துணிகள் வெள்ளை நிறத்தில் இருப்பது நல்லது. எனவே வெள்ளை பெட்ஷீட்களை பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். ப்ளீச்சிங் செய்யவும் வெள்ளை பெட்ஷீட்கள் ஏற்றவையாக உள்ளன.
Vande Bharat sleeper coach
மற்ற வண்ணங்களில் உள்ள பெட்ஷீட்களைச் சுத்தப்படுத்த அதிக வெப்பநிலையில் மேலும் அதிகமான சோப்பு போட்டு வெளுக்க வேண்டியிருக்கும். ஆனால், வெள்ளை நிறத்தில் உள்ள படுக்கை விரிப்புகள் மீண்டும் மீண்டும் துவைத்தாலும் சுத்தமான, பளிச்சென்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
Indian Railways
அதுமட்டுமின்றி, வெவ்வேறு வண்ண படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தினால், துவைக்கும்போது வண்ணச் சாயங்கள் கலப்பதைத் தவிர்க்க அவற்றைத் தனித்தனியாகத் துவைக்க வேண்டியிருக்கும். இந்தக் காரணத்தாலும் வெள்ளை நிற பெட்ஷீட்களே பயணிகள் பயன்பாட்டுக்குச் சிறந்தவை என்று இந்திய ரயில்வே கருதுகிறது.