இந்திய ரயில்களில் இவர்கள் பயணிக்க டிக்கெட் தேவையில்லை! இலவசமாக பயணிக்கலாம்!

First Published | May 11, 2024, 5:24 PM IST

இந்திய ரயில்வேயில் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் பயணிகள் 25% முதல் 75% வரை சலுகையைப் பெறலாம். ஒரு பிரிவில், மக்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யலாம்!

எலும்பியல் குறைபாடுகள் உள்ளவர்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்கள், மனநலம் குன்றியவர்கள் தனியாகவோ அல்லது துணையுடன் பயணம் செய்யலாம். டிக்கெட் விலையில் 25 முதல் 75% தள்ளுபடி பெறலாம். செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ளவர்களுக்கும் 50% சலுகை பொருந்தும்.

புற்றுநோய் நோயாளிகள் 50% முதல் சலுகை கிடைக்கும். ஸ்லீப்பர் மற்றும் 3 டயர் ஏசியில் 100% தள்ளுபடியில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். மூத்த குடிமக்களுக்கும் சலுகை உள்ளது. 60 வயதை எட்டிய ஆண்கள் அனைத்து வகுப்புகளிலும் 40% சலுகை பெறலாம். 58 வயதை எட்டிய பெண்கள் அனைத்து வகுப்புகளிலும் 50% சலுகை பெறலாம்.

Latest Videos


பல்வேறு விருது பெற்றவர்கள் ரயில்வேயில் சிறப்புச் சலுகை பெற முடியும். சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம் மற்றும் இந்திய காவல் துறை விருது பெற்றவர்கள் 60 வயதிற்குப் பிறகு எந்த நோக்கத்திற்காகவும் பயணம் செய்தாலும் சிறப்புச் சலுகை உண்டு. ஆண்களுக்கு 50%, பெண்களுக்கு 60% கட்டணச் சலுகை உண்டு.

உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவிகள் எந்த நோக்கத்திற்காக பயணம் செய்தாலும் 2வது வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பில் 75% சலுகை பெற முடியும். கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு 50% முதல் 75% வரை தள்ளுபடி கிடைக்கும்.

Railways launches one more train to North Bengal

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுச் சுற்றுலா செல்ல இரண்டாம் வகுப்பில் 75% சலுகையில் டிக்கெட் கிடைக்கும். தேசிய இளைஞர் திட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றால் 50%, மனவ் உத்தன் சேவா சமிதியில் கலந்துகொள்வதற்காகச் சென்றால் 40% கிடைக்கும். இது 2வது வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்குப் பொருந்தும்.

அரசு வேலைக்கான நேர்காணல்களில் கலந்துகொள்ள பயணம் செய்யும் வேலையில்லாத இளைஞர்கள் இரண்டாம் வகுப்பில் 100% சலுகை பெறலாம். ஸ்லீப்பர் வகுப்பிலும் 50% தள்ளபடி உண்டு.

விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வருடாந்திர மாநாடுகளில் கலந்துகொள்வதற்காகச் செல்லும்போது, 25% முதல் 50% வரை சலுகை கிடைக்கும். கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 50% முதல் 75% சலுகை பெறலாம். அலோபதி மருத்துவர்கள் ராஜ்தானி / சதாப்தி/ ஜன் சதாப்தி ரயில்களின் அனைத்து வகுப்புகளிலும் 10% சலுகை பெறலாம். செவிலியர்கள் 25% சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம்.

click me!