கோடையில் முட்டை சாப்பிடலாமா..? கூடாதா..? ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிட்டலாம் தெரியுமா..?

First Published May 6, 2024, 2:25 PM IST

முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன ஆனால், கோடையில் முட்டை சாப்பிடலாமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

உங்களுக்கு தெரியுமா.. கோடையில் முட்டை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு முட்டைகளை சாப்பிடுகிறீர்கள்..? மேலும், முட்டையில் எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.

முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கோடைக்காலத்தில் உடலுக்குத் தகுந்தாற்போல் தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் நீங்கள் வேக வைத்து அல்லது  ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

முட்டையில் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் புரதங்கள் ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

இதையும் படிங்க:  Health Tips : நீங்கள் ஒரு மாதம் முட்டை சாப்பிடவில்லை எனில் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?

மேலும், முட்டையில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்தும். அதுபோல லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முட்டையில் உள்ளது, இது கண்ணின் விழித்திரையில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி, கண்புரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இதையும் படிங்க: தினமும் முட்டை சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

அதுபோல் முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும். மேலும், முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளதால், இது உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!