Local Holiday: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா.. மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

First Published Apr 25, 2024, 2:53 PM IST

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர்த் திருவிழாவை ஒட்டி வரும் மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Srirangam Chithirai Thiruvizha

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரை தேர்த் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இவ்விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Local Holiday

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேர்த் திருவிழா மே 6ம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தகுதிநீக்கமா? தேர்தல் ஆணையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Trichy District Collector

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Government Office

இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881 (Negotiable Instruments Act-1881) கீழ் வராது என்பதால், அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் தலைமை கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன், செயல்படும். மேலும் உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே 29ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Today Gold Rate in Chennai: அப்பாடா! நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்! தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

click me!