நடிகையுடன் கள்ள தொடர்பு! கையும் களவுமாக சிக்கினார்.. யுவா பற்றி சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகள் கூறிய ஷாக் தகவல்

First Published Jun 11, 2024, 5:26 PM IST

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் சகோதரர் ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் யுவா ராஜ்குமார் பற்றி, அவரின் மருமகள் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கன்னட திரையுலக சூப்பர் ஸ்டாரும் மறைந்த நடிகரும், அரசியல் வாதியுமான ராஜ்குமாரின் மகன் நடிகர் ராகவேந்திரா ராஜ்குமாரின் இரண்டாவது மகனான யுவா ராஜ்குமார், தன்னுடைய மனைவி ஸ்ரீதேவி பைரப்பா தன்னை கொடுமைப்படுத்துவதாக நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரை உலகில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது யுவா - ஸ்ரீதேவி விவாகரத்து விஷயம். யுவா  ராஜ்குமார், தன்னுடைய காதலி ஸ்ரீதேவி வைரப்பா என்பவரை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்களே ஆகும் நிலையில், தற்போது விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

Aishwarya and Umapathy Wedding Photos: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை கரம்பிடித்தார் உமாபதி ராமையா! திருமண போட்டோஸ்!

Yuva Rajkumar Sridevi Byrappa

யுவா தன்னுடைய இந்த விவாகரத்து முடிவுக்கு மனைவி ஸ்ரீதேவி தான் காரணம், அவர் தன்னை பெற்றோரை விட்டு பிரிக்க முயன்றதாகவும், தன்னுடைய பணத்திற்கு ஆசை பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியதோடு, பல வகையில் கொடுமை படுத்தியதாக விவாகரத்து மனுவில் கூறியுள்ளார்.

Yuva Rajkumar Sridevi Byrappa

யுவாவின் புகார்களை ஸ்ரீதேவி முழுமையாக மறுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீதேவி தரப்பில் இருந்து கூறப்படுவதாவது, "யுவா ராகவேந்திராவை தான் கொடுமை படுத்தவில்லை. அவரால் மனதளவிலும் உடலளவிலும் அதிகம் காயப்பட்டு உள்ளேன். யுவா தன்னுடன் இணைந்து நடித்த நடிகை உடன் கள்ளத்தொடர்பில் உள்ளார். கடந்த ஒரு வருடமாகவே இருவரும் ஒன்றாக இருப்பதாக குடும்பத்தாரும், நண்பர்களும் தன்னிடம் பலமுறை தெரிவித்துள்ளனர் ஆனால் ஆரம்பத்தில் அதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

அதிதி ஷங்கருக்கு போட்டியா? வனிதா விஜயகுமார் மகன் ஸ்ரீஹரிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்!

Yuva Rajkumar Sridevi Byrappa

அமெரிக்காவில் உள்ள ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நான், கடந்தாண்டு டிசம்பர் மாதம் விடுமுறைக்காக இந்தியா வந்தபோது தான் யுவா ராகவேந்திராவின் கள்ள தொடர்பு குறித்து தனக்கு தெரிய வந்தது. தன்னுடைய கணவரையும் அந்த நடிகையையும் கையும் களவுமாக ஹோட்டல் அறையில் பிடித்து விசாரித்தேன், இதுகுறித்து கேள்வி எழுப்பிய பின்னர் என் மீது பல குற்றச்சாட்டுகளை சுமாற்றி தற்போது விவாகரத்து வரை கொண்டு வந்துவிட்டார்.

அவர் மீது உள்ள தவறுகளை மறைப்பதற்கு நான் கொடுமைப்படுத்துவதாக அவர் கூறுவதில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி வைரப்பாவின் வக்கீல் பேசும் போது "ஸ்ரீதேவி குடும்பத்தில் இருந்து யுவாவை பிரிக்க நினைத்தால், அவர் ஏன் படிக்க செல்வதற்கு முன்பில் இருந்தே ஒன்றாக கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும். அதே போல் நகை - பணத்திற்காக ஆசை படுவதாக யுவா கூறியுள்ளார். ஸ்ரீதேவின் சில கோடி மதிப்பு கொண்ட நகைகளை கூட அவரின் மாமியார், அதாவது யுவாவின் அம்மா தான் வைத்துள்ளார் என கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

சீமான் கையால் விருது வாங்கிவிட்டு... அவரேயே மேடையில் அசிங்கப்படுத்தினாரா ஆவுடையப்பன்? தெரிய வந்த உண்மை!

Latest Videos

click me!