Drinking Water: மேட்டுப்பாளையம் நகராட்சியில் எலும்பு, மாமிசத்துடன் வந்த குடிநீர் - பொதுமக்கள் அதிர்ச்சி

By Velmurugan s  |  First Published Jun 18, 2024, 1:37 PM IST

மேட்டுப்பாளையம் நகராட்சி 21வது வார்டில் ஒரு சில வீடுகளில் குடிநீரில் துகள்களாக கலந்து வந்த முடி, இறைச்சி, எலும்பு துண்டுகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 21 வது வார்டில் நகர்மன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த நவீன் என்பவர் உள்ளார்.  இந்த வார்டில் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் கெண்டையூர் சாமப்பா லேஅவுட்டில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள்  நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கு மிகவும் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் குடிநீரில் சிறு சிறு துகள்களாக முடி, இறைச்சி, சிறிய எலும்பு துண்டுகள் கலந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கண்டதும் பாதிக்கப்பட்ட குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

பரந்தூர் விமான நிலையத்தால் தமிழகத்தை விட்டு ஆந்திராவுக்கு குடியேற நினைக்கும் மக்கள் - அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

குடிநீரில் கலந்து வந்த துர்நாற்றம் காரணமாக குடிநீரைக்குடித்த ஒரு சிலருக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் நகராட்சி குடிநீர் வழங்கும் துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்றனர். முடி, இறைச்சி, எலும்பு துண்டுகள் வந்த குடிநீர் குழாயை உடைத்து ஆய்வு செய்தனர். 

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது; அட்டகாசத்திற்கு முடிவு கட்டுங்கள் - மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

அப்போது குடிநீர் வரும் இணைப்பு குழாய் அருகே முடி, இறைச்சி, எலும்பு துண்டுகள் குவிந்து காணப்பட்டது. குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு இந்த பொருள்கள் துகள்களாக கலந்து  வந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது. உடனடியாக நகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாய் அருகே குவிந்து கிடந்த கழிவுகளை அகற்றிவிட்டு குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து  மீண்டும் அந்தப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட பின்னர்  தான் குடிநீர் மாசடைந்து வருகிறதா என்பது தெரிய வரும். இந்த சம்பவம் காரணமாக அந்த வார்டில் உள்ள பொது மக்கள் குடிநீரை குடிக்கவே அச்சமடைந்துள்ளனர்.

click me!