Janhvi Net worth: 27 வயசுதான் ... நடிகையான 7 வருடத்தில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

First Published Mar 6, 2024, 3:16 PM IST

நடிகை ஜான்வி கபூர் இன்று, தன்னுடைய 27-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில்... இவர் சுயமாக நடித்து சம்பாதித்த சொத்துக்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரை தெடர்ந்து, இவரின் இரண்டு மகள்களுமே தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்கள். குறிப்பாக ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி பாலிவுட் திரையுலகை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
 

அம்மா 8 அடி பாய்ந்தால்... குட்டி 16 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, அறிமுகமான முதல் படமான 'தடக்' திரைப்படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார் ஜான்வி. இந்த படத்தின் கதையை, தன்னுடைய மகளுக்காக தேர்வு செய்தது ஸ்ரீதேவியாக இருந்தாலும், இப்படம் வெளியாவதற்கு முன்பே, துபாயின் நடந்த குடும்ப உறவினர் திருமணத்திற்கு சென்றபோது, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

வரலட்சுமியின் வருங்கால கணவரின் முன்னாள் மனைவி உலக அழகியா? கண்டீஷனோடு திருமணம்.. பயில்வான் பகிர்ந்த சீக்ரெட்!
 

அம்மாவின் ஆசியோடும் , தந்தை கொடுத்த தைரியத்தாலும்... தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், குஞ்சன் சக்சேனா, மிலி, குட் லக்  ஜெர்ரி போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களையும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். 
 

கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்திய ஜான்வி, தற்போது... தென்னிந்திய திரையுலகிலும் நடிக்க துவங்கியுள்ளார். ஏற்கனவே நடிகர் ஜூனியர் NTRக்கு ஜோடியாக, 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வரும் ஜான்வி, இதை தொடர்ந்து ராம் சரணுக்கு ஜோடியாக அவரது RC16-ஆவது படத்தில் நடிக்கிறார். 

RRR பட ஹீரோக்களை குறிவைத்த ஜான்வி! ஜூனியர் என்டிஆரை தொடர்ந்து ராம் சரணுக்கு ஜோடியாகிறார்!
 

இந்த படம் குறித்த அறிவிப்பு, இன்று ஜான்வி பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதுதவிர இரண்டு ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். திரையுலகில் அறிமுகமான 7 வருடத்தில் ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ள, ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

ஜான்வி கபூர் முன்னனி தயாரிப்பாளராக இருக்கும் நிலையில், தன்னுடைய பிள்ளைகளுக்காக ஏராளமான சொத்துக்களை அவர் சேர்த்து வைத்துள்ளார். அதே போல் நடிகை ஸ்ரீதேவியும் மகள்களுக்கு பல சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். ஆனாலும் ஜான்வி - குஷி இருவருமே தங்களின் சொந்த காலில் நிற்கவேண்டும் என விரும்புபவர்கள். 

Goundamani Networth: 84 வயதிலும் ஹீரோவாக நடிக்கும்.. காமெடி கிங் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

அதன்படி இதுவரை ஜான்வி சுயமாக சம்பாதித்து, மும்பையில் ஒரு பிளாட் மற்றும் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதே போல் 3 கார்கள் வைத்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இவரின் சொத்து மதிப்பு சுமார் 58 கோடி முதல் 65 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.

click me!