Vijay Son : விஜய் மகனுக்கு ‘நோ’ சொன்ன சிவகார்த்திகேயன்... ஹீரோ கிடைக்காமல் திண்டாடும் ஜேசன் சஞ்சய்?

First Published Mar 19, 2024, 9:06 AM IST

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

jason sanjay, Sivakarthikeyan

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனின் பிலிம் மேக்கிங் சம்பந்தமான படிப்பை முடித்த கையோடு, சினிமாவில் இயக்குனராகும் கனவோடு இருந்து வந்துள்ளார். அவரை ஹீரோவாக்க ஆசைப்பட்ட விஜய் அதற்காக கதையெல்லாம் தேர்வு செய்து வைத்திருந்தாராம். பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் ஐடியாவில் இருந்த விஜய்யிடம் தனக்கு நடிப்பில் இண்டிரஸ்ட் இல்லை என வெளிப்படையாகவே சொல்லிவிட்டாராம் ஜேசன் சஞ்சய்.

Jason sanjay, vijay

மகனை கட்டாயப்படுத்த விரும்பாத விஜய், அவரின் ஆசைப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டாராம். இதையடுத்து விஜய் மகனின் இயக்குனர் கனவு நனவானது. அதன்படி கடந்தாண்டு நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையும் படியுங்கள்... Vijay Car : நடிகர் விஜய் நடத்திய ரோட் ஷோவால் ஸ்தம்பித்த கேரளா.... சல்லி சல்லியாய் நொறுக்கப்பட்ட தளபதியின் கார்

Vijay son Jason sanjay

லைகா தயாரிப்பில் விஜய் மகன் இயக்கும் படம் உருவாகிறது என்கிற அறிவிப்புக்கு பின் அப்படத்தின் அடுத்த அப்டேட் ஒன்றுகூட வெளியாகவில்லை. அப்படத்திற்காக ஹீரோ தேர்வு மும்முரமாக நடந்து வருவதாக கூறப்பட்டது. முதலில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என கூறப்பட்டது. பின்னர் மலையாள நடிகர் துல்கர் சல்மானின் பெயர் அடிபட்டது. அண்மையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன.

sivakarthikeyan

ஆனால் இதுவரை யாரும் உறுதிசெய்யப்படவில்லையாம். இந்த நிலையில், விஜய் மகன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த சம்பவமும் நடந்துள்ளதாக கோலிவுட்டில் தகவல் ஒன்று கசிந்துள்ளது. எஸ்.கே-வை சந்தித்து கதை சொன்ன சஞ்சய்யிடம் படத்தில் தனக்கேற்ற கமர்ஷியம் அம்சங்கள் இல்லை எனக்கூறி சிவகார்த்திகேயன் ரிஜெக்ட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் பேச்சைக் கேட்காமல் இயக்குனராகி இருக்கும் சஞ்சய்யின் படத்தில் நடித்தால் விஜய்யின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் அவர் ரிஜெக்ட் செய்திருக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில்.. விஜய் சேதுபதி கேரக்டரை நிராகரித்த 2 பிரபலங்கள்! ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார் தெரியுமா

click me!